சினிமா

கமலுக்கு இந்தியன் என்றால்.. ரஜினிக்கு ஜெய்லர்.. தாறுமாறு லுக்கில் சூப்பர்ஸ்டார்

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் படங்கள் அடுத்தடுத்து திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் உடைய ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஒரு முதன்மை காவலர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் தொடங்கி இருக்கிறது.

இதை தொடர்ந்து ஜெயிலர் திரைப்படத்தின் உடைய ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகர் ரஜினிகாந்த் ஒரு கம்பீரமான தோற்றத்தில் காணப்படுகிறார். மேலும் காலா, கபாலி ஆகிய படங்களுக்குப் பிறகு இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் வயதான தோற்றத்தில் இருக்கிறார். ரஜினிகாந்த் படம் முழுவதுமாகவே இதே லுக்கில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்தை திரைப்படம் ரசிகர்களிடையே சற்று ஏமாற்றத்தை தந்தது. அதனால் நடிகர் ரஜினிகாந்துக்கு இந்த ஜெய்லர் திரைப்படம் ஒரு சிறந்த கம் பேக்காக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஐஸ்வர்யாராய், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன் மேலும் கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டாராகிய சிவராஜ் குமார் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருக்கு 169 ஆவது படம் ஆகும்.இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கிறார். இவர் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடைய பேட்ட திரைப்படத்திற்கு இசையமைத்து அதில் உள்ள பாடல்களையும் வெற்றி பெற செய்தவர் என்பதால் இந்த திரைப்படத்திலும் பாடல்கள் நிச்சயம் வெற்றி அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்காது.

மேலும் இந்த திரைப்படத்தின் இயக்குனர் நெல்சன் இயக்கிய பீஸ்ட் திரைப்படமும் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனால் அதனால் இந்த ஜெயில் திரைப்படத்திற்கு இயக்குனர் நெல்சன் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பு இருப்பதால் நிச்சயம் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை அடையும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

TOP STORIES

To Top