Wednesday, May 8, 2024
- Advertisement -
Homeசினிமாஅப்போ அலெக்ஸ் பாண்டியன்.. இப்போ முத்துவேல் பாண்டியன்..! ஜெய்லர் டீசரில் மிரட்டும் ரஜினி

அப்போ அலெக்ஸ் பாண்டியன்.. இப்போ முத்துவேல் பாண்டியன்..! ஜெய்லர் டீசரில் மிரட்டும் ரஜினி

- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாள் முன்னிட்டு அவர் நடிக்கும் புதிய திரைப்படமான ஜெய்லர் படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இயக்குனர் நெல்சன், அனிருத் இசையில் வெளியாகியுள்ள இந்த டீசர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகர் ரஜினிக்கும், நெல்சனுக்கும் தனிப்பட்ட முறையில் அவர்களுடைய முந்தைய படங்கள் எதிர்பார்க்க வெற்றியைப் பெறவில்லை.

இதனால் இருவரும் மீண்டும் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் கொடுக்க வேண்டிய நெருக்கடியில் ஜெய்லர் படத்தில் இணைந்திருக்கிறார்கள். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் இயக்கியுள்ளது. முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கிறார். ஏற்கனவே அவர் நடித்த அலெக்ஸ் பாண்டியன் என்ற கதாபாத்திரம் காலத்துக்கும் அழியாத நிலையில் தற்போது முத்துவேல் பாண்டியன் என்று ஜெயிலர் படத்தில் வருகிறார்.

- Advertisement -

இதனால் மூன்று முகம் திரைப்படத்திற்கும் ஜெய்லர் திரைப்படத்திற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. மேலும் எப்போதும் அரசியல் உலகத்திற்கும் ரஜினிக்கும் தொடர்பு இருந்து கொண்டே இருக்கும். ஏற்கனவே சிவாஜி திரைப்படத்தில் எம்ஜிஆர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரஜினி அசத்திய நிலையில், தற்போது கருணாநிதியின் முத்துவேல் என்ற பெயரை தாங்கி ஜெய்லர் படத்தில் வருவதும் ரசிகர்கள் இடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

ஜெய்லர் படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ஏற்கனவே பொன்னியின் செல்வன் திரைப்படமும் கோடைகால விடுமுறையை குறிவைத்து  உள்ளதால் இவ்விரண்டு படங்களும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
இந்த படத்தில் ரஜினியின் மகளாக பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசரில் ரஜினி தன் ஆடைகளை அணிந்து தயாராகி விட்டு பெரிய அளவிலான கத்தியை எடுத்து வருவது போன்று மிரட்டளான காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. அனிருத் இசையும் இந்த டீசருக்கு பெரும் வலுவை சேர்த்து உள்ளது.

Most Popular