நடிகர் ரஜினிகாந்த் நடித்த திரையரங்கில் பட்டையை கிளப்பி வரும் திரைப்படம் ஜெய்லர் ஒரு வாரத்தில் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்பதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளாக படங்களை வாங்கி வெளியிட்டு வருகிறது. மேலும் சில திரைப்படங்களை தயாரித்து நேரடியாகவும் வெளியிட்டனர். ஆனால் தங்களுடைய வரலாற்றில் இதுவரை எந்த திரைப்படத்திற்கும் அவர்கள் சக்சஸ் பார்ட்டி மற்றும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி என எதையும் நடத்தவில்லை.
முதல் முறையாக ஜெயிலர் திரைப்படத்திற்கு தான் அவர்கள் நடத்தி இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய இயக்குனர் நெல்சன் படம் ரிலீஸ் ஆவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு நடிகர் ரஜினி திரைப்படத்தை திரையரங்கில் பார்த்ததாக கூறினார்.
படம் முடிந்தவுடன் தாம் ரஜினி சாரிடம் சென்று படம் உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா நீங்கள் எதிர்பார்த்தபடி வந்திருக்கிறதா என கேட்டேன். அதற்கு என்னை கட்டி அணைத்த ரஜினி நான் நினைத்ததை விட பத்து மடங்கு சூப்பராக படம் வந்திருக்கிறது. எனக்கு மனநிறையுடன் திருப்தி என்று கூறினார்.
இதேபோன்று படத்தில் நடித்த வசந்த் ரவி, கடைசி நாளன்று உங்களை மிகவும் மிஸ் செய்வேன் சார் என்று கூறினேன். அதற்கு நானும் தான் தம்பி என்று பதில் அளித்தார். மேலும் மீண்டும் நாம் ஒரு படத்தில் இணைந்து நடிப்போம் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி, ஒவ்வொரு நாளும் படத்தில் வசூல் குறித்து செய்திகள் வரும்போது காதில் ஜீராவை எடுத்து ஊற்றுவது போல் இருக்கிறது என்று கூறினார்.
ஒவ்வொரு நாளும் 100 கோடி என்று சொல்கிறார்கள். ஆயிரம் கோடி வசூலை ஜெய்லர் படைத்து விடும் என நினைக்கிறேன் என்று அவர் கூறினார். இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், படம் வெளியாகி ஒரு வாரத்தில் 375 கோடியே 40 லட்சம் ரூபாய் வசூலை உலகம் முழுவதும் படைத்திருப்பதாக கூறியுள்ளனர்.
மேலும் சில நாடுகளில் இருந்து வசூல் விபரம் வந்து அடையவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதனால் படம் நிச்சயம் 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்திருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.