Sunday, May 5, 2024
- Advertisement -
Homeசினிமாஜெய்லர் 3 நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல் தெரியுமா? துணிவு படத்தின் ஒட்டுமொத்த வசூலும் 3...

ஜெய்லர் 3 நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல் தெரியுமா? துணிவு படத்தின் ஒட்டுமொத்த வசூலும் 3 நாளில் பிரேக் செய்த ரஜினி

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெய்லர் திரைப்படம் வசூல் வாரிக் குவித்து வருகிறது. படம் ரிலீஸ் ஆகி மூன்று நாட்களில் திரும்பும் இடங்கள் எல்லாம் ஹவுஸ்புல் காட்சிகளாக மக்கள் கூட்ட நிரம்பி வருகிறது.

- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் வசூல் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்ததோ அதேபோல் ஒரு சாதனையை ரஜினிகாந்த் படைத்திருக்கிறார். இதன் மூலம் தமது பவரை ரஜினிகாந்த் மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

இந்த நிலையில் நடிகர் அஜித் நடித்து பொங்களுக்கு வெளியான துணிவு கலெக்ஷனை மூன்றே நாட்களில் ஜெயிலர் முறியடித்திருக்கிறது.

- Advertisement -

துணிவு திரைப்படம் ஒட்டுமொத்தமாக உலக அளவில் 185 கோடி ரூபாயை வசூல் செய்திருந்தது, தற்போது இதனை மூன்றே நாட்களில் ஜெய்லர் முறியடித்திருக்கிறது.உலகம் முழுவதும் ஜெய்லர் 210 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.

- Advertisement -

இதன் மூலம் நடபாண்டில் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற பட்டியலில் மூன்றாவது இடத்தில் ஜெயிலர் இருக்கிறது. முதல் இடத்தில் வாரிசும் இரண்டாவது இடத்தில் பொன்னியின் செல்வன் பாகம் இரண்டும் மூன்றாம் இடத்தில் ஜெயிலரும் இருக்கின்றது.

இந்த நிலை நீடித்தால் வாரிசு சாதனையை தூக்கிப்போட்டு விட்டு நடப்பாண்டில் நம்பர் ஒன் வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை ஜெய்லர் பெறும். இதே போன்று உலகின் பல்வேறு இடங்களிலும் ஜெயிலர் மகத்தான சாதனையை செய்து கொண்டு வருகிறது.

ஏற்கனவே அமெரிக்காவில் விக்ரம் சாதனையை முறியடித்த ஜெயிலர் ஆஸ்திரேலியாவில் மாஸ்டர் சாதனை பிரேக் செய்து இருக்கிறது. இதேபோன்று துணிவு திரைப்படத்தின் சாதனையை ஒவ்வொரு ஊரிலும் ஜெய்லர் முறியடித்திருக்கிறது.
ஒட்டு மொத்தமாக துணிவின் வசூலை ஜெய்லர் முந்தினாலும் தமிழ்நாட்டில் துணிவின் வசூலை வரும் இரண்டு நாட்களில் ஜெயிலர் பிரேக் செய்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலை நீடித்தால் அதிக வசூல் செய்த தமிழ் படம் என்ற விக்ரம் பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று ஆகிய சாதனைகளை ஜெயிலர் பிரேக் செய்யக்கூடும்.அவ்வளவு ஏன் இதுவரை அதிக வசூல் செய்த தமிழ் படம் என்ற பெருமையை 2.0 பெற்றிருக்கிறது. அதனையும் பிரேக் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Most Popular