உலகிலேயே அதிக வசூல் செய்த திரைப்படங்களில் 13 ஆண்டுகளாக முதன்மை வகிக்கும் படம் அவதார். உலகம் முழுவதும் 2.8 பில்லியன் அமெரிக்கா டாலர்கள் ( 18957 கோடிகள் இந்திய ரூபாயில் ) சம்பாதித்தது. ஜேம்ஸ் கேமரூன் எழுதி, இயக்கி, தயாரித்து மற்றும் துணை நின்று எடிட்டிங் செய்த இந்தப் படம் காலத்திற்கும் உயர்ந்து நிற்கும். இந்த படத்தின் இரண்டாம் பாகம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாகிறது. அதையொட்டி 2009ஆம் ஆண்டு வந்த அவதார் முதல் பாகம் தற்போது உலகெங்கும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
4K டிஜிட்டலுக்கு ஏற்றவாறு தேவையான மாற்றங்களைச் செய்து நேற்று ( செப்டம்பர் 23ஆம் தேதி ) படக்குழு இதனை மீண்டும் திரைக்கு கொண்டுவந்தனர். இந்தியாவில் நேற்று சினிமா தினத்தை முன்னிட்டு அனைத்து திரையரங்குகளும் 75 ரூபாய் கட்டணத்தை நிர்னையித்தனர் ( தமிழகம் அல்ல ). ஐ மேக்ஸ் ஸ்க்ரீனில் மட்டும் 150 ரூபாய். குறைந்த விலையில் இந்த மாபெரும் படைப்பை பலர் ரசித்தனர்.
எப்பேர்பட்ட எடிட்டிங் ! வியக்க வைக்கும் காட்சிகள். அன்றிலின்று இன்று வரை இந்த படத்திற்கான வெறி இன்னும் குறையவில்லை. நேற்று இரவு வரை இந்திய முழுவதும் 77 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன. 1 கோடி ரூபாய் வரை லாபம் ஈன்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இரண்டாம் பாகத்திற்கு முன் இந்த வெளியீடு ரசிகர்கள் மத்தியில் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது. படக்குழுக்கு மீண்டும் ஓர் வெற்றி.
இறுதியில் சர்ப்ரெய்ஸ் அளித்த இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன்
ரீமாஸ்டர் செய்யப்பட்டு வெளியாகியுள்ள அவதார் திரைப்படத்தின் இறுதியில் மீண்டும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து மேலும் 10 நிமிடங்கள் மெய் சிலிர்க்க வைத்தது இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன். இன்னும் 3 மாதங்களில் வரவிருக்கும் அவதார், தி வே ஆப் வாட்டர் படத்தின் 10 நிமிட காட்சிகள் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட படத்தின் இறுதியில் காணப்படுகிறது. முழுக்க முழுக்க தண்ணீருக்கு அடியில் நடக்கும் கதை படமாக்கப்பட்டுள்ளது. அதோடு அவதார் முடியப்போவதில்லை. இயக்குனர் மொத்தம் 4 பாகங்கள் எழுதி வைத்துள்ளார். மேலும் சாதனைகள் படைக்க மற்றும் நம்மை கவர அவதார் வந்து கொண்டே இருக்கிறது.
அவதார் ( 2009 ) படத்தை திரையரங்கில் காண்பது வாழ்நாள் அனுபவத்தில் ஒன்று. மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் இந்த வாரம் முழுக்க திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. இதை ரசிகர்கள் யாரும் தவறவிடாதீர்கள்.