Saturday, November 23, 2024
- Advertisement -
Homeசினிமாபுகழை மட்டுமே பிடித்து வாழும், ஒரு அற்ப உயிரினம்.. இளையராஜா மீது ஜேம்ஸ் வசந்த் மறைமுக...

புகழை மட்டுமே பிடித்து வாழும், ஒரு அற்ப உயிரினம்.. இளையராஜா மீது ஜேம்ஸ் வசந்த் மறைமுக தாக்கு?

தமிழ் சினிமாவில் இசை சக்கரவர்த்தியாக இன்றும் இருப்பவர் இளையராஜா. 48 ஆண்டுகளுக்கு முன்பு அவர் அமைத்த பாடல்களை இன்றும் இளைஞர்கள் கேட்டு வருகின்றனர். ஆனால் இளையராஜா இசையில் மட்டும்தான் சக்கரவர்த்தி,மற்ற விஷயத்தில் அவர் வெறும் மெழுகுவர்த்தி தான் என்று ரசிகர்களும் வெளிப்படையாக விமர்சித்து வருகிறார்கள்.

- Advertisement -

இளையராஜா எப்போதும் பல சர்ச்சை கருத்துக்களையும் நான் தான் பெரியவன் என்ற அகங்காரத்திலும் பேசுவது வாடிக்கை. இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தமக்கு தலைகனம் இருக்கும் என்று சொல்பவர்களுக்கு எவ்வளவு தலைதனம் இருக்கும் என்று பேசி சர்ச்சை ஏற்படுத்தினார்.

Ilayaraja member of rajya sabha

இந்த நிலையில் இதற்கு பதிலளித்துள்ள இசை அமைப்பாளரும் நிகழ்ச்சி தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன், இளையராஜாவை மறைமுகமாக கடுமையாக சாடியிருக்கிறார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் புகழ் அனைவருக்கும் பிடிக்கும் தான்.

- Advertisement -

ஆனால் அதை மட்டும் பிடித்து வாழும் ஒரு அற்ப உயிரினம் இது என்று அவர் பதிவிட்டு இருக்கிறார். இது இளையராஜாவை தான் ஜேம்ஸ் வசந்தன் விமர்சித்திருப்பதாக பலரும் அவரை திட்டினர். இதற்கு விளக்கம் அளித்துள்ள ஜேம்ஸ் வசந்தன், இளையராஜா தான் தமது இசை குரு என்று குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இளையராஜா மீது எனக்கு வெறுப்பு இருந்தால் அவருடைய பாடலை நான் கேட்பேனா என்று குறிப்பிட்டுள்ளார். மதரீதியாக தான் எவ்வித பாகுபாடும் இளையராஜா மீது பார்ப்பதில்லை என்றும் சுட்டிக்காட்டி உள்ள ஜேம்ஸ் வசந்தன் இசைஞானி குறித்து விமர்சனம் செய்தால் எத்தனை எதிர் கருத்துக்கள் வரும் என்று எனக்குத் தெரியாதா? என்று கேள்வி கேட்டுள்ளார்.

மேலும் இசைஞானியின் பொதுவழி செயல்பாட்டை மட்டும்தான் விமர்சிப்பதாகவும் அவர்
தெரிவித்துள்ளார். கடந்த மாதம் பிராமணர்கள் குறித்து எனக்கு பிடித்த விஷயங்களை நான் பதிவிட்டதாக தெரிவித்துள்ள ஜேம்ஸ் வசந்தன், பிற மதங்கள் மீது தமக்கு வெறுப்பு இருந்தால் இவ்வாறு பேச முடியுமா என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்த இந்த நாட்டில் மீண்டும் ஒற்றுமை நிலவத்தான் போகிறது என்பதை தின்னமாக தாம் நம்புவதாகவும் ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளார். கடவுள் இருப்பவனுக்கு மதம் கிடையாது என்றும் மதம் இருப்பவனுக்கு கடவுள் கிடையாது என்று பழமொழியை மேற்கோள் காட்டி ஜேம்ஸ் வசந்த் தமது பதிவை முடித்துள்ளார்.

Most Popular