சினிமா

கிரிக்கெட் படத்தில் நடிப்பதற்காக வலைப் பயிற்சியில் ஈடுபட்ட ஜான்வி கபூர் ! மரண கலாய் கலாய்த்த நெடிசன்கள் – வீடியோ இணைப்பு

Janhvi Kapoor Mr and Mrs Mahi

போனி கபூர் – ஶ்ரீதேவியின் மகளான பாலிவுட் கதாநாயகி ஜான்வி கபூர் தனது அடுத்த படத்திற்காக தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். ஹிந்தியில் தடக், ரூஹி, குட் லக் ஜெர்ரி ஆகிய திரைப்படங்களில் நடித்த ஜான்வி அடுத்ததாக சரன் ஷர்மா இயக்கத்தில் மிஸ்டர் அண்ட் மிஸ்ட்ரஸ் மாஹி படத்தில் நடித்து வருகிறார்.

கிரிக்கெட் சம்மந்தப்பட்ட இப்படத்தில் நடிப்பதற்கு முன் தன்னை முழுமையாக தயார் படுத்திக் கொள்ளவிருப்பதாக ஏற்கனவே அவர் தெரிவித்தார். சில மாதங்களாக கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டு வந்த ஜான்வி கபூர் நேற்று தன் வலைப்பயிற்சி வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

அதைக் கண்டு ரசிகர்கள் ஒருபக்கம் அவரது அழகில் மயங்கி ஹார்ட் எமோஜிகளை தூவ மற்றவர்கள் மறுபக்கம் கேலி செய்தனர். டென்னிஸ் பந்தில் விளையாடும் போது லெக் பேட் மற்றும் க்ளௌஸ் அணிந்திருப்பதை குறிப்பிட்டு நகையாடினர்.

அது மட்டுமில்லாமல் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு இந்தியா நம்பும் ஒரே கிரிக்கெட்டர் என்றும் கிரிக்கெட்டில் இன்னும் பல தூரங்கள் போக வாழ்த்துக்கள் தெரிவித்தும் நக்கல் செய்தனர். இத்தகு கேலிகளை அவர் சுலபமாக எடுத்துக் கொண்டு மீண்டும் தன் வேலையில் கவனம் செலுத்தி வருகிறார்.

கிரிக்கெட் வீராங்கனை கதாபாத்திரத்தில் நடிப்பது அவ்வளு எளிது அல்ல. எந்த வித அனுபவமும் இல்லாமல் தயாராவது சற்று கஷ்டமான காரியம் தான். மேலும், கிரிக்கெட் வீராங்கனையாக நடிப்பாற்றலை வெளிப்படுத்துவதில் ஜான்வி கபூருக்கு கடும் போட்டி இருக்கிறது.

சமீபத்தில் மித்தாலி ராஜ் வாழ்க்கை வரலாற்றில் டாப்சி சிறப்பாக நடித்து பாராட்டுகளை பெற்றார். பாலிவுட்டில் அடுத்து வரவிருக்கும் கோஸ்வாமி வாழ்கை வரலாற்றில் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது.

TOP STORIES

To Top