சினிமா

” தயாராக இருங்கள் விஜய் ரசிகர்களே ! தாறு மாறான டான்ஸ் காத்திருக்கிறது ! ” – வாரிசு படத்தின் அப்டேட் கொடுத்துள்ள ஜானி மாஸ்டர்

Jani master and Vijay

2023 பொங்கல் பண்டிகையை மேலும் சிறப்பிக்க தளபதியின் வாரிசு படமும் தல அஜித்தின் துணிவு படமும் மோதுவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. 2013ஆம் ஆண்டு ஜில்லா – வீரம் படத்திற்கு பின் தற்போது தான் இருவரும் ஒன்றாக அவர்களது படத்தை வெளியிடுகின்றனர். இரு தரப்பு ரசிகர்களும் இதனால் உற்சாகத்தின் இமயதிற்குச் சென்றுள்ளனர்.

இளையதளபதி விஜய்யின் வாரிசு படத்திற்கு தேவைப்பட்ட நாட்களை விட அதிகமாக இயக்குனர் வம்சி பைதப்பல்லி எடுத்து வருகிறார். இன்னும் 2 பாடல்கள் மட்டுமே பாக்கியுள்ளதாக தெரிதிவிதிர்க்கிறது படக்குழு. படத்தின் முதல் பாடல் வருகின்ற தீபாவளி அன்று வெளியாகும் என்று ஏற்கனவே இசையமைப்பாளர் தமன் கூறிவிட்டார்.

Advertisement

தற்போது படத்தின் நடன மாஸ்டர் ஜானி விஜய் ரசிகர்களுக்கு அவரது பக்கத்தில் இருந்து அப்டேட் கொடுத்துள்ளார். “ அன்பிற்குரிய விஜய் ரசிகர்களே, என் வார்த்தையை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். தளபதி விஜய்யின் மாஸான டான்ஸை கான தயாராகுங்கள். யாரும் அமைதியாக அமர்ந்து கொண்டு அதைப் பாரக்க மாட்டீர்கள். டான்ஸ் தீயாய் இருக்கும். ” என தன் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.

இது ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. பொதுவாக நடனத்திற்கு பெயர் போனவர் நடிகர் விஜய். அவர் சிறப்பாக டான்ஸ் ஆடுவதோடு பார்போரையும் ஆடச் செய்பவர். மேலும் வாரிசு படத்தில் விஜய்யின் விண்டேஜ் பாட்டான ஆல்தோட்ட பூபதி ரீமிக்ஸ் ஆவதால் ரசிகர்களுக்கு டபுள் தமாக்கா தான்.

Advertisement

அதே சமயம் ஜானி மாஸ்டரின் இந்த பதிவை சிலர் கேலி செய்தும் வருகின்றனர். அவர்கள் யார் என்றால் பீஸ்ட் படத்தில் அரபிக் குத்து மற்றும் ஜாலியோ ஜிம்க்கானா பாட்டின் டான்ஸ் பிடிக்காதவர்கள். அந்த நடனத்திற்கு பல குறைகள் சமூக வலைத்தளங்களில் பரவின. இம்முறை ரசிகர்களை ஜானி மாஸ்டர் ஏமாற்ற மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top