சினிமா

ரசிகர்களின் கோரிக்கையை ஏற்ற விஜய்.. பிரபல மாஸ்டர் அதிரடி நீக்கம்

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த தளபதி 67 தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. இதில் படத்தில் யார் யார் பங்கேற்கிறார்கள் என்பது குறித்து பட குழு அறிவிப்பு வெளியிட்டது. இதில் நடனம் மாஸ்டர் ஒருவர் பெயர் இல்லாதது குறித்து விஜய் ரசிகர்கள் நிம்மதி பெரும் மூச்சு அடைந்துள்ளனர். காரணம் விஜயை பிடிக்காதவர்கள் கூட அவருடைய நடனத்தை குறை சொல்ல மாட்டார்கள்.

Advertisement

ஏனெனில் அந்த அளவிற்கு நேர்த்தியான நடனத்தை விஜய் ஆடுவார். ஆனால் கடந்த இரண்டு படங்களாக விஜயின் நடனம் குறித்தும் பல கேலி கிண்டல்கள் எழுந்து வருகிறது. இதற்கு காரணம் தெலுங்கு சினிமாவை சேர்ந்த ஜானி மாஸ்டர் தான். வித்தியாசமாக ஸ்டேப் அமைக்கிறேன் என்று கூறி  பார்ப்பதற்கு ரசனையே இல்லாத அளவில் சில ஸ்டெப்புகளை அவர் வைத்துள்ளார். பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபி குத்து பாடல்களில் விஜய் கஷ்டப்பட்டு ஆடினாலும் அது பார்ப்பதற்கு கிண்டல் செய்யும் விதமாக இருந்தது.

அதேபோன்று ரஞ்சிதமே பாடலிலும் ஜான் மாஸ்டர் அமைத்துள்ள ஸ்டெப் ஏதும் ரசிகர்களை கவரவில்லை. விஜய்க்கு மட்டுமல்லாமல் நடிகர் கார்த்திக்கு விருமன் படத்தில் ஜாணி மாஸ்டர் வைத்துள்ள ஸ்டெப் முகத்தை சுளிக்கும் வகையில் அமைந்தது. மேலும் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே ஜானி மாஸ்டர் தேவை இல்லாமல் பேசி ரசிகர்களிடம் தொடர்ந்து சிக்கி வருகிறார். இதனால் ஜாணி மாஸ்டர் உடன் விஜய் இணைந்து பணியாற்ற கூடாது என பல்வேறு தரப்பு விஜய் ரசிகர்களும் வலியுறுத்தினர்.

Advertisement

இதனை அடுத்து தளபதி 67 படத்தில் ஜானி மாஸ்டர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தினேஷ் மாஸ்டர் பணியாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாஸ்டர் படத்தில் இவர் ஏற்கனவே வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனத்தை அமைத்தார். அது உலக அளவில் மிகப் பிரபலமானது. வாத்தி கம்மிங் பிறகு விஜய் பாடல்கள் ஹிட் அடித்தாலும் அவருடைய நடனம் பெரிய அளவில் பேசப்படவில்லை. இதனால் தான் நடிகர் விஜய் ஜானி மாஸ்டருக்கு பை பை சொல்லிவிட்டார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top