Thursday, May 2, 2024
- Advertisement -
Homeசினிமாஅப்பாவைப் போலவே மகனும் சிம்பிள்.. ஜேசன் சஞ்சய் படத்தின் கதாநாயகன் மற்றும் இசை அமைப்பாளர் தேர்வு.....

அப்பாவைப் போலவே மகனும் சிம்பிள்.. ஜேசன் சஞ்சய் படத்தின் கதாநாயகன் மற்றும் இசை அமைப்பாளர் தேர்வு.. !

இளைய தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய். அண்மையில் கோலிவுட்டில் தன் வருகையை அறிவித்துள்ளார். தன் அப்பா போல் இல்லாமல் தாத்தா சந்திரசேகர் வழியில் இயக்குனராக வளர்ந்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் தன் முதல் படத்தை இயக்குகிறார் ஜேசன் விஜய்.

- Advertisement -

தளபதியின் மகன் வெளிநாட்டு பிலிம் சிட்டியில் படித்தவர். மேலும் அவர்களது பாணியில் ஓர் குறும்படதையும் இயக்கியுள்ளார். தற்போது தமிழ் சினிமாவில் படம் செய்ய முன்னேறியுள்ளார். முதல் படத்திற்கான ஒப்பந்த சான்றிதழ்களை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கையெழுத்திட்ட புகைப்படங்கள் வைரலானது.

இந்தத் படத்தில் ஹீரோவாக நடிப்பவர்களின் பட்டியல் என வழக்கம் போல் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின. விக்ரமின் மகன் த்ருவ் விக்ரம் நடிப்பதாக கூறினர் ஆனால் அவர் பட்டியலில் இடம்பெறக் கூடவில்லை என தற்போது செய்திகள் வந்துள்ளன.

- Advertisement -

இப்படத்திற்கு எந்த பெரிய நடிகரை வேண்டுமானாலும் கேளுங்கள் என ஓப்பனாக சாய்ஸ் வழங்கியது லைகா நிறுவனம். ஆனால் ஜேசன் சஞ்சய், கதைக்குத் தேவையான ஹீரோ மட்டுமே போதும் என சிம்பிளாக இருக்கிறார். ஹரிஷ் கல்யாண், அதர்வா மற்றும் கவின் ஆகிய மூவரின் ஒருவரை வைத்து படம் செய்யத் முடிவு செய்தது படக்குழு.

- Advertisement -

இதில் அத்ரவா ரெட் கார்டு விவகாரத்தால் ஒதுக்கப்பட்டார். ஹரிஷ் கல்யாணின் சமீபத்திய படங்கள் சரியாக போகாததால் அவரும் இடம்பெற வாய்ப்பில்லை. ஆகையால் கவின் தான் 99% உறுதி எனக் கூறுகின்றனர். அவரின் படங்கள் மற்றும் நடிப்பு மிகவும் வரவேற்கத்தக்கதாகவும் உள்ளது.

மேலும் ஜேசன் சஞ்சையின் படத்தின் மற்றொரு அப்டேட்டும் கிடைத்துள்ளது. இந்தப் படத்திற்கு இசையமைக்க யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஜேசன் சஞ்சய் யுவனின் தீவிர ரசிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆகையால் இச்செய்தியில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை. ஒரே சமயத்தில் விஜய்க்கும் அவரது மகனின் படத்திற்கும் யுவன் இசையமைக்கிறார்.

Most Popular