Monday, April 29, 2024
- Advertisement -
Homeசினிமாஜவான் மாபெரும் வெற்றி.. அட்லீ செய்த சம்பவம்.. 1000 கோடி லோடிங்

ஜவான் மாபெரும் வெற்றி.. அட்லீ செய்த சம்பவம்.. 1000 கோடி லோடிங்

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குநர்களின் ஒருவராக இருப்பவர் அட்லி. ராஜா ராணி என்ற தனது முதல் திரைப்படத்தின் மூலமே 100 நாள் கண்ட இயக்குனர் என்ற பெருமையை பெற்றார்.

- Advertisement -

இதனை அடுத்து அவர் எடுத்த அனைத்து படங்களும் மாபெரும் ஹிட் அடைந்தது.குறிப்பாக தளபதி விஜய் உடன் இணைந்து மூன்று படங்களை அட்லி இயக்கினார்.அது அனைத்துமே வசூலில் வாரி குவித்தது.

தெறி,மெர்சல், பிகில் ஆகிய மூன்று படங்களுமே விஜய்க்கும் அட்லிக்கும் ஒரு நல்ல பெயரை பெற்று தந்தது. இதனை அடுத்து நடிகர் அட்லி மீது தேசிய அளவில் பார்வை பட்டது. இந்த நிலையில் நடிகர் சாருக் கான் அட்லியை அழைத்து தமக்கு ஒரு படம் செய்யுங்கள் என்று கூறியிருந்தார்.

- Advertisement -

அதுதான் தற்போது ஜவான் என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. அட்லி படம் என்றால் மாஸ் காட்சிகளுக்கு குறை இருக்காது. அந்த வகையில் ஜவான் திரைப்படம் ஃபுல் மீல்ஸ் விருந்தை வட இந்திய ரசிகர்களுக்கு கொடுத்து இருக்கிறது.

- Advertisement -

ஷாருக்கான் இந்த படத்தில் ஏழு கெட்டப்புகளில் வருகிறார். குறிப்பாக தந்தை ஷாருக்கான் கதாபாத்திரம் ரசிகர்களை மிரள வைத்திருக்கிறது.தமிழ் படங்களில் வருவது போல் இன்டெர்வல் காட்சிகள் ரசிகர்களை சீட்டை விட்டு எழுந்து கற்ற வைத்திருக்கிறது.

மேலும் அட்லி படத்தில் எப்போதுமே சமுதாய நல கருத்துக்களும் இருக்கும். அதன்படி ஆக்சிஜன் தட்டுப்பாடு,விவசாயிகள் பிரச்சனை, பெரிய கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கடன் ரத்து ஆகிய பிரச்சினைகளை குறித்தும் அட்லீ ஜவான் படம் மூலம் பேசி இருக்கிறார்.

ஹிந்தி படங்களில் இப்படி ஒரு மாஸ் படம் வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதேபோன்று இந்த படம் இருக்கின்ற அனைத்து சாதனைகளையும் உடைத்து புதிய சாதனை படைக்கும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.

நயன்தாராவின் கதாபாத்திரம் இன்னும் கொஞ்சம் பலமாக இருந்திருந்தால் மனதில் நின்றிருக்கும் . படத்தின் ஃப்ளாஷ் பேக் போஷன்களும் மனதில் நிற்கும்படி இருக்கிறது. மேலும் அனிருத் இசை படத்திற்கு எப்போதும் போல் அசுர பலத்தை சேர்த்திருக்கிறது. நம் தமிழ்நாட்டிலிருந்து ஒருவர் ஹிந்தி சினிமாவில் சென்று வெற்றி கொடியை நாட்டி வந்திருக்கிறார் என்று நாம் பெருமிதத்தோடு சொல்லலாம்.

Most Popular