இந்திய சினிமாவில் தற்போது பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்திருக்கும் திரைப்படம் அட்லி இயக்கத்தில் வெளியாகியுள்ள ஜவான். நடிகர் ஷாருக் கான் தற்போது பதான் படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில் தற்போது அனைவரும் எதிர்பார்ப்பும் ஜவான் மீது தான் திரும்பி உள்ளது.
அட்லி மாஸான படங்களை விஜயை வைத்து இயக்கி வசூல் சாதனையும் படைத்தவர்.தற்போது அவர் பாலிவுட் பாட்ஷாவான ஷாருக்கான் வைத்து படம் செய்கிறார். இதன் மூலம் ஜவான் திரைப்படம் மிகப்பெரிய சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்னும் முடிவடையவில்லை. மேலும் பல்வேறு காட்சிகளை இன்னும் மெருகேற்றும் வகையில் இயக்குனர் அட்லி செயல்பட உள்ளார். மேலும் படத்திற்கான ப்ரமோஷன் பணிகளுக்கு நேரம் வேண்டும் என்பதால் ஜவான் படம் ஜூன் மாதத்தில் இருந்து அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது நடிகர் விஜயின் லியோ திரைப்படத்திற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது. லியோ பூஜை விடுமுறையை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. இந்தப் படம் மூலம் ஹிந்தி மார்க்கெட்டிலும் விஜய் கைப்பற்ற முடிவு எடுத்துள்ளார். வெளிநாட்டிலும் இந்த படம் பெரிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .
இந்த நிலையில் ஜவான், லியோ படத்திற்கு போட்டியாக வந்தால் அது இரு படத்தின் வசூலையும் பெரும் அளவில் பாதிக்கும். குறிப்பாக ஷாருக்கான் படத்தோடு விஜய் படம் ஹிந்தியில் ஓட கொஞ்சம் கூட வாய்ப்பு இல்லை. இது லியோ படத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்படுத்தும். அட்லீயின் இந்த முடிவு விஜய் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆளாக்கியுள்ளது.
ஜவான் திரைப்படம் அக்டோபர் இரண்டாம் தேதி வந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. எனினும் அதுவும் பூஜை விடுமுறை மையமாகக் கொண்டு வெளியானால் லியோ தள்ளிப் போக வாய்ப்பு உள்ளது.