ஆளப்போறான் தமிழன் என்பது அட்லி இயக்கத்தில் மெர்சல் படத்தில் முக்கியமான பாடலாக உள்ளது. அதற்கு வலு சேர்க்கும் விதமாக இயக்குனர் அட்லி தற்போது தன்னுடைய வெற்றி கொடியை பாலிவுட் நாட்டியுள்ளார்.
ஏற்கனவே தமிழ் சினிமாவில் இருந்து கமல்ஹாசன், ரஜினி, மணிரத்தினம், ஏ ஆர் ரகுமான் போன்றோர் இந்திய அளவில் மிகப்பெரிய சாதனைகளை படைத்திருக்கிறார்கள். தற்போது இந்த பட்டியலில் அட்லியும் அனிருத்தும் இணைந்திருக்கிறார்கள்.
ஹிந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆன ஷாருக் கானின் ஜவான் திரைப்படத்தை அட்லீ இயக்கி வருகிறார். இந்த இந்தப் படத்தில் முக்கால்வாசி கலைஞர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தான். வில்லனாக விஜய் சேதுபதி இசையமைப்பாளராக அனிருத் ஹீரோயினாக நயன்தாரா என அனைவருக்கும் வாய்ப்பு வழங்கி அட்லீ கவுரவித்திருக்கிறார்.
இந்த நிலையில் அனிருத்தின் மிரட்டலான இசை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் இந்திய சினிமாவில் இசை உரிமம் அதிக தொகைக்கு விற்கப்பட்ட படம் என்ற சாதனையை ஜவான் பெற்றிருக்கிறது.
ஜவானின் ஹிந்தி பாடல் உரிமம் மட்டும் சுமார் 36 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டிருக்கிறது. இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் ட்ரிபிள் ஆர் இருக்கிறது. ட்ரிபிள் ஆரின் அனைத்து மொழிகளும் சேர்த்து 25 கோடி ரூபாய் தான் இசை உரிமம் விற்கப்பட்டிருக்கிறது.
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் பிரபாஸ் நடித்த சாஹோ இருக்கிறது. இது அனைத்து மொழிகளையும் சேர்த்து 22 கோடி ரூபாய்க்கு இசை உரிமம் விற்கப்பட்டிருக்கிறது. இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தில் தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படம் இருக்கிறது.
அனைத்து மொழிகள் இசையும் 18 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டிருக்கிறது. இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் பாகுபலி 2 இருக்கிறது.பாகுபலி 2 இசை அனைத்து மொழிகளிலும் சுமார் 10 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டிருக்கிறது. இந்த பட்டியலில் அனிருத் இசை மற்றும் இரண்டு இடத்தில் பிடித்திருப்பது அவருடைய வளர்ச்சியை காட்டுகிறது.