சினிமா

ஜெயம் ரவிக்கு ஜோடியாகும் அழகு தேவதை.. இயக்குனர் ராஜேஷ் உடன் கூட்டணி

நடிகர் ஜெயம் ரவி தற்போது அடுத்த அடுத்த படங்களின் நடித்து படு பிஸியாக இருக்கிறார். பொன்னியின் செல்வன் திரைப்படம் அடுத்த மாதம் 30 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதில் அருள்மொழி வர்மன் ஆக ஜெயம் ரவி நடிக்கிறார். இந்த படத்திற்கான புரமோஷன் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஜெயம் ரவியின் அடுத்த படமான அகிலனுக்கும் திரைக்கு வர இருக்கிறது.

இந்த படத்தின் டிரைலரும் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதில் கப்பலில் பணிபுரியும் ஊழியராக ஜெயம் ரவி நடிக்கிறார். இதனைத் தொடர்ந்து இயக்குனர் அகமது உடன் ஜெயம் ரவி பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இதில் தனி ஒருவன் ஜோடியான நயன்தாரா இரண்டாவது முறையாக ஜெயம் ரவியுடன் சேர்ந்து உள்ளார்.

இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்து வருகிறார். இந்த நிலையில் ஜெயம் ரவியின் 30வது திரைப்படத்திற்கான பூஜை சென்னையில் நடைபெற்றது.இந்த படத்தில் முதல் முறையாக ராஜேஷ் உடன் ஜெயம் ரவி கூட்டணி செல்கிறார்.பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க போன்ற ஹிட் படங்களை கொடுத்த ராஜேஷ் ஜெயம் ரவியை வைத்து நகைச்சுவை ஆக்சன் கலந்த திரைப்படத்தை எடுத்து எடுக்கிறார்.

இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு முதல் முறையாக பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்கிறார். ஜெயம் ரவி படத்திற்கு நான்காவது முறையாக இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பணியாற்றுகிறார். இந்த படம் அடுத்த வாரம் முதல் கேரளாவில் படப்பிடிப்பு நடைபெறுகிறது.தென்னிந்திய மாநிலங்களில் கதை நடைபெறுவது போல் திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் ஷூட்டிங் வரும் டிசம்பர் மாதம் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் அல்லது ஜனவரி இறுதியில் இந்த திரைப்படம் திரைக்கு வரலாம்.கோமாளி படத்துக்கு பிறகு ஜெயம் ரவி கொஞ்சம் கேப் விட்டா மறுபடியும் தொடர்ந்து ஜெயம் ரவி அடுத்தடுத்து படங்களில் நடித்து வருவது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது.

TOP STORIES

To Top