Friday, March 29, 2024
- Advertisement -
Homeசினிமாஆம்புலன்ஸ் டிரைவராக நடிக்கும் ஜெயம் ரவி..!  எந்த படம் தெரியுமா?

ஆம்புலன்ஸ் டிரைவராக நடிக்கும் ஜெயம் ரவி..!  எந்த படம் தெரியுமா?

- Advertisement -

பொன்னியின் செல்வன் திரைப்படம் மூலம் உச்சத்தை தொட்ட ஜெயம் ரவி தொடர்ந்து ஹிட் படங்களை கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் அகிலன் திரைப்படம் படுதோல்வியை தழுவியது. இதனால் மனம் உடைந்துள்ள ஜெயம் ரவி, மீண்டும் வெற்றி படங்களை கொடுக்க தயாராகி வருகிறார்.

இதற்காக அடுத்தடுத்து பல்வேறு படங்களில் நடிக்க ஜெயம் ரவி ஒப்பந்தமாகியுள்ளார். அகிலன் திரைப்படம் வித்தியாசமாக துறைமுகத்தில் எடுக்கப்பட்டதால் அதனை ஜெயம் ரவி நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் திரைக்கதையில் சொதப்பியதால் படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெறவில்லை. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ஜெயம் ரவிக்கு பெரிய வெற்றியை கொடுக்கும் என அனைவருக்கும் தெரிந்த விஷயமே. ஆனால் அதன் பிறகு அந்த வெற்றியை தக்க வைத்துக் கொள்ள ஜெயம் ரவி தற்போது போராடி வருகிறார்.

- Advertisement -

இறைவன் என்ற திரைப்படத்தில் ஜெயம் ரவி நடித்து முடித்து விட்டார். இது மே மாதம் திரைக்கு வர உள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது சைரன் என்ற திரைப்படத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார். இதில் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக ஜெயம் ரவி நடித்து வருகிறார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். ஜெயம் ரவி படத்தில் இது வித்தியாசமான திரைக்கதை கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இதில் கீர்த்தி சுரேஷ் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் அனுப்புமா பரமேஸ்வரன், யோகி பாபு சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்கள். திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.கேஜிஎப் திரைப்படத்தை எடுத்த ஹாம்பாலே பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறார்கள்.

சைரன் திரைப்படத்தை ஆண்டனி பாக்யராஜ் என்று அறிமுக இயக்குனர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே அண்ணாத்த,விசுவாசம் ஹீரோ போன்ற படங்களில் துணை எழுத்தாளராக கதையை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்திற்காக தான் ஜெயம் ரவி வித்தியாசமான தோற்றத்தில் அஜித் போல் சால்ட் அண்ட் பேப்பர் லுக்கில் பலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular