சினிமா

சபரிமலைக்கு சென்ற ஜெய்ராம், ஜெயம் ரவி, விக்னேஷ் சிவன்.. அஜித் பற்றி கேள்வியால் அதிர்ச்சி

தமிழ் சினிமாவில் அதிக வசூலை ஈட்டிய திரைப்படம் என்ற சாதனையை பொன்னியின் செல்வன் முதல் பாகம் படைத்திருக்கிறது. இது ஜெயம் ரவி, கார்த்தி போன்ற நடிகர்களுக்கு பெரிய மைல்கல்லாக அமைந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாகம் வரும் ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி வருகிறது. இந்த நிலையில் முதல் பாகம் அடைந்த வெற்றிக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக நடிகர் ஜெயம் ரவி ,ஜெயராம் ஆகியோர் இணைந்து சபரிமலைக்கு சென்று  மகரஜோதியை கண்டு வழிபாடு நடத்தினர்.

Advertisement

அதேபோன்று இரு நடிகர்களுடன் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கலந்து கொண்டு மகரஜோதியை கண்டு களித்தார். அப்போது விக்னேஷ் சிவனை சூழ்ந்து கொண்ட செய்தியாளர்கள் துணிவு படம் வெற்றி குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு கோயிலில் வந்து இப்படி கேள்வி கேட்கிறார்களே என்று அதிர்ச்சியில் இருந்த விக்னேஷ் சிவன்,தாம் கோவிலுக்கு வந்திருப்பதாகவும் மகரஜோதியை கண்டு தரிசனம் செய்வதற்காக வந்திருக்கிறேன் என்று பதில் அளித்தார்.

அஜித்தின் அடுத்த படத்தை எடுக்க எப்படி திட்டமிட்டுள்ளீர்கள் என்று கேள்வி கேட்டதற்கு சரியான முறையில் பணியாற்ற வேண்டும் என்று திட்டம் வைத்திருக்கிறேன் என்று பதில் அளித்தார். மீண்டும் சினிமா தொடர்பாக கேள்வி கேட்டதற்கு கடுப்பான விக்னேஷ் சிவன், சாமி சரணம், சாமி சரணம் என்று கூறி அங்கிருந்து சென்றார். நடிகர்கள் இயக்குனர்கள் ஒரு பக்தராக சபரிமலை சென்ற நிலையில் அங்கு அவர்களிடம் சினிமா குறித்து கேள்வி கேட்கப்பட்டது அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement

ஏற்கனவே சபரிமலைக்கு நடிகர்களின் போஸ்டர்கள் பேனர்கள் எடுத்து வர கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஜெயம் ரவியின் 29 வது திரைப்படம் ஆன இறைவன் பர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் நயன்தாரா ஜோடியாக நடித்திருக்கிறார் என்பது கபடைத்திருக்கிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top