சினிமா

அகிலன் படம் எப்படி இருக்கு? தியேட்டரில் பார்க்கலாமா?

ஜெயம் ரவி வித்தியாசமான படத்தில் நடிக்க வேண்டும் என்று மெனக்கிடுவார், ஆனால் படத்தின் திரைக்கதை காலை வாரி விடும். அந்த பட்டியலில் புதியதாக இணைந்துள்ளது அகிலன்.

கடற்கரையோரத்தில் நடக்கும் குற்றங்களை மட்டுமே மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் வகையான த்ரில்லர் திரைப்படமாக இருக்க விரும்பினாலும், அனைத்து செய்தியையும் ஒரு மூட்டையில் கட்டி இறுதியில் சொதப்பிவிட்டது.

Advertisement

துறைமுகத்தில் கிரேன் ஆபரேட்டராக ஜெயம் ரவி நடிக்கிறார். இருப்பினும், துறைமுகத்தில் பல சட்டவிரோத நடவடிக்கைகளில் அவருக்கு தொடர்பு உள்ளது, . அதற்கு இணையாக, துறைமுக பாதுகாப்பு அதிகாரியாக நடிக்கும் சிராக் ஜானி, அகிலனைப் பிடிக்க போராடுகிறார். இப்படியே படத்தின் முதல் பாதி முடிவடைந்துவிட்டது.

Advertisement


கதைக்களத்தில் ஏற்படும் திடீர் மாற்றம், குறிப்பாக இரண்டாம் பாதியில், படத்தின் வேகத்தை குறைக்கிறது. கெட்டவனாக வரும் ஜெயம் ரவி படம் முழுவதும் அப்படியே இருந்திருந்தால், படம் சுவாரஸ்யமாக இருந்திருக்கும். ஜெயம் ரவி ஏன் மாறினார் என்றும் பலமாக சொல்லப்பட வில்லை.

அகிலன் படத்தின் பிளஸ் பாய்ண்ட் என்றால், உங்களை துறைமுக உலகம் எப்படி இருக்கும் என்று காட்டப்பட்டுள்ளது. துறைமுகத்திற்குள் முழு படமும் படமாக்கப்பட்டிருப்பதால், வித்தியாசமான அனுபவத்தை மக்களுக்கு கொடுத்திருக்கும. ஜெயம் ரவி தனது கதாபாத்திரத்திற்கு தீவிர உழைப்பை போட்டுள்ளார்.

ஹீரோ-வில்லன் மோதல் படத்தின் மற்றொரு பலவீனமான அம்சமாக கருதப்படுகிறது. மொத்தத்தில் அகிலன் சுமார் ரகம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top