தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு முக்கிய இடத்தை பிடித்திருப்பவர் தான் நடிகர் ஜெயம் ரவி. நடிகர் ஜெயம் ரவி இன்றுடன் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து 20 ஆண்டுகள் ஆகிறது.
அவருடைய முதல் படமான ஜெயம் இன்று திரைக்கு வந்தது ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றதால் தன்னுடைய பெயரில் ஜெயம் என்று சேர்த்துக் கொண்டார். ஜெயம் ரவியின் தந்தை ஒரு இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.
அவருடைய தாய் ஹிந்து குடும்பத்தை சேர்ந்தவர். இதனால் இரண்டு மதங்களும் ஜெயம் ரவிக்கு சொந்தம் தான். ஜெயம் ரவியின் இயற்பெயர் முகமது ரவி. மதத்திற்கு அப்பாற்பட்டு இருந்த ஜெயம் ரவி சென்னையிலும் ஹைதராபாத்திலும் தன்னுடைய சிறுவயதை கழித்து வந்தார். தந்தை மோகனுக்கு தான் சாதிக்க முடியாததை தமது குழந்தைகளை வைத்து சாதிக்க வேண்டும் என்பது வெறியாக இருந்தது.
இதனால் இயக்குனர் ஜெயம் ராஜா மற்றும் ஜெயம் ரவி இருவருமே திரைப்படத்தை நோக்கியே நகர்ந்து சென்றார்கள். சிறுவனாகவே இருக்கும் போது ஜெயம் ரவி ஒரு தொட்டில் சபதம், பாவா பாவாமிருதி பல்நாட்டி புருஷம் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
ஜெயம் ரவி மும்பையில் உள்ள ஒரு இன்ஸ்டிடியூட்டில் நடிப்பு பயிற்சி பெற்றார். இதனை தொடர்ந்து ஆளவந்தான் திரைப்படத்தில் சுரேஷ் கிருஷ்ணாவுக்கு உதவி இயக்குனராக ஜெயம் ரவி பணிபுரிந்தார். ஜெயம் ரவியின் சினிமா வேட்கைக்கு ஒரு சம்பவமாக அனைவரும் சொல்வது இதைதான்.
திருவிழா என்று வந்தால் அவள் கோவில் வர மாட்டார் என்ற பாடல் ஜெயம்ரவி வாழ்க்கையில் திருப்பி போட்டது. ஆனால் இந்த பாடலை எடுக்கும் போது அவருக்கு 100 டிகிரிக்கு மேல் காய்ச்சல் அடித்தது.
எனினும் படப்பிடிப்பை தள்ளி வைக்க முடியாது என்பதால் ஜெயம் ரவி காய்ச்சலுடன் இந்த பாடலை நடனம் ஆடினார். ஜெயம் ரவி தனது இரண்டாவது படத்திலேயே தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகருக்கான விருதை எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தில் பெற்றார்.
பெரும்பாலும் ஜெயம் ரவி தெலுங்கில் ஹிட்டான படங்களை தமிழில் ரீமேக் செய்து நடித்தார் இதில் சந்தோஷப்பிரமணியம், மழை தாஸ் எனக்கும் உனக்கும் போன்ற படங்கள் மிகப்பெரிய ஹிட் பெற்றது. ஜெயம் ரவிக்கு பெயரை வாங்கிக் கொடுத்த திரைப்படம் என்றால் தீபாவளியும் பேராண்மை திரைப்படம் தான்.
இந்த இரு படங்களும் ஜெயம் ரவி குள் இருக்கும் ஒரு நடிகனை வெளியே கொண்டு வந்தது. ஜெயம் ரவி வாழ்க்கையில் மிகப்பெரிய ஹிட்டை கொடுத்த படம் என்றால் அது தனி ஒருவன் தான். இது பிறகு மிருதன், போகன், அடங்கமறு போன்ற படங்களில் நடித்த ஜெயம் ரவிக்கு மீண்டும் கோமாளி மிகப் பெரிய பிரேக் கொடுத்தது.
அதன் பிறகு தன்னுடைய வாழ்நாளில் சிறந்த கதாபாத்திரமாக பொன்னியின் செல்வனின் ராஜராஜ சோழனாக ஜெயம் ரவி நடித்தார் ஜெயம் ரவி பள்ளிப் பருவத்தில் இருந்து நடிகர் விஜய் என்றால் மிகவும் பிடிக்குமாம். இதேபோன்று நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.
முதலில் இந்த காதலை மறுத்த பெற்றோர்கள் பின்னர் ஜெயம் ரவியின் சோகத்தால் பிறகு ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நடிகர் ஜெயம்ரவி என்றால் மிகவும் பிடிக்குமா ஜெயம் ரவியின் தீபாவளி படத்தை தன்னுடைய வீட்டில் உள்ள பெரிய திரையில் ஜெயலலிதா திரும்பத் திரும்ப போட்டு பார்த்தாராம். ஜெயம் ரவியின் சொத்து மதிப்பு சுமார் 75 கோடி ரூபாய் வரை இருக்கும் ஜெயம் ரவி ஒரு படத்திற்கு சுமார் 3 கோடி ரூபாயை சம்பளமாக பெறுகிறார்
ஜெயம் ரவி இன்னும் தமிழ் சினிமாவை வேற லெவலுக்கு கொண்டு செல்லும் கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற வேண்டும் என நமது பில்டர் சினிமா ரசிகர்கள் சார்பாக வாழ்த்து தெரிவித்துக் கொள்ளலாம்.