Wednesday, March 27, 2024
- Advertisement -
Homeசினிமாஇது வேற லெவல் சப்ரைஸ்.. ஜிகர்தண்டா 2வில் எஸ்ஜே சூர்யா vs ராகவா லாரன்ஸ்

இது வேற லெவல் சப்ரைஸ்.. ஜிகர்தண்டா 2வில் எஸ்ஜே சூர்யா vs ராகவா லாரன்ஸ்

- Advertisement -

தமிழ் சினிமாவில் 2014 ஆம் ஆண்டு வெளியான ஜிகர்தண்டா திரைப்படம் எதிர்பாராத அளவிற்கு வெற்றியை அடைந்தது. ஆக்சன் மற்றும் காமெடி நிறைந்த இந்த ஜிகர்தண்டா திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜிற்கு இது ஒரு திருப்புமுனையான படமாக அமைந்தது.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்திற்கு கூட இந்த ஜிகர்தண்டா திரைப்படம் தான் வித்தாக அமைந்தது. ஜிகர்தண்டா திரைப்படத்தின் மூலம் கவரப்பட்டதால் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேட்ட திரைப்படத்தில் நடித்த ஒப்புக்கொண்டார்.

- Advertisement -

அப்படிப்பட்ட புகழுக்கு உரிய இந்த ஜிகர்தண்டா திரைப்படத்தின் கதாநாயகனாக நடிகர் சித்தார்த் நடித்திருந்தார். மேலும் கதாநாயகியாக நடிகை லட்சுமி மேனனும் நடித்திருந்தார்கள்.இதில் துணை கதாபாத்திரங்களாக பாபி சிம்ஹா ,கருணாகரன் போன்றோர் நடித்திருந்தார்கள்.

- Advertisement -

துணை நடிகர் பிரிவில் நடிகர் பாபி சிம்ஹாவிற்கு தேசிய விருது பெற்று தந்தது. ஜிகர்தண்டா திரைப்படம் மேலும் எடிட்டர் விவேக் ஹர்ஷனுக்கும் இந்த திரைப்படம் தேசிய விருதை பெற்று தந்தது. இப்படிப்பட்ட வெற்றியை அடைந்த ஜிகர்தண்டா திரைப்படத்தின் இரண்டாவது பாகம் தற்பொழுது நிறைவடைந்து விட்டது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகர்தண்டா பாகம் இரண்டிற்கு ஜிகர்தண்டா டப்லெக்ஸ் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்தத் திரைப்படத்தின் யாவரும் எதிர்பாராத அளவிற்கு இரண்டு முக்கிய கதாபாத்திரங்களை கார்த்திக் சுப்புராஜ் தேர்வு செய்திருக்கின்றார். இந்த திரைப்படத்தின் டீசர் வெளியான நிமிடமே ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியை தரக்கூடிய வகையில் இந்த திரைப்படத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யாவும், நடிகர் லாரன்ஸும் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்திருக்கிறார்கள்.

ஆளில்லா ஒரு நிலப்பரப்பில் எஸ் ஜே சூர்யா நடந்து வருகிறார். அவருக்கு எதிரில் இருக்கும் ஒரு குடிசையில் ராகவா லாரன்ஸ் யானை தந்தங்களை வைத்து ஏதோ ஆயுதங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறார். எஸ் ஜே சூர்யா வாசித்த மவுத்தார்கன் இசை கேட்டு புயல் போன்று யானை பலத்தோடு வெளியே வருவது போன்ற காட்சியும் இந்த டீசரில் இடம்பெற்றிருக்கிறது. மேலும் கையால் எஸ் ஜே சூர்யா லாரன்ஸை பார்த்து அம்பு விட எஸ் ஜே சூர்யாவிற்கு பின்புலிருந்து போலீஸ் சாமானிய மக்கள் அரசியல்வாதிகள் போன்ற அனைவரும் கொந்தளித்து படையெடுத்து வருகிறார்கள். அதைக் கண்டு சற்றும் அஞ்சாத நடிகர் லாரன்ஸ் மண்ணிலிருந்து வித்தியாசமான ஒரு ஆயுதத்தை எடுத்து தில்லாக நிற்பதும் படைகளைக் கிளப்பி விட்டு கூலாக எஸ் ஜே சூர்யா அமந்திருப்பது போன்ற காட்சியே இந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தின் உடைய டீசரில் இடம் பெற்றிருக்கிறது.

இப்படி வெளியாகி இருக்கும் இந்த டீசரை ரசிகர்களுடைய ஆர்வத்தை மென்மேலும் தூண்டி இருக்கிறது. நிச்சயம் இந்த திரைப்படம் எதிர்பாராத வெற்றியை அடையும் என்று அவர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular