Saturday, December 7, 2024
- Advertisement -
Homeசினிமாஜிகர்தண்டா டபிள் எக்ஸ் - ஜப்பான் இதுவரை வசூல் அறிவிப்பு.. யார் வெற்றியாளர்.. !

ஜிகர்தண்டா டபிள் எக்ஸ் – ஜப்பான் இதுவரை வசூல் அறிவிப்பு.. யார் வெற்றியாளர்.. !

கடந்த இரண்டு ஆண்டுகளாக தீபாவளிக்கு பெரிய பட்ஜெட் படங்கள் எதுவும் வரவில்லை. சென்ற ஆண்டு பிரின்ஸ் மற்றும் சர்தார் வந்தன. இந்த முறையும் அதே போல படங்களே வெளியாகியுள்ளன. ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகமான டபுள் எக்ஸ் மற்றும் கார்த்தியின் ஜப்பான் படங்கள் மோதுயுள்ளன.

- Advertisement -

9 வருடங்களுக்கு முன் வெளியாகிய ஜிகர்தண்டா படத்தின் ப்ரீக்குவலாக‌ டபுள் எக்ஸ் அமைந்துள்ளது. ஆனால் முந்தைய பாகத்தைப் போல காமெடி இல்லாமல் ஆக்க்ஷன் & எமோஷ்னல் வகையில் உருவாகியுள்ளது. மறுபக்கம் ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்த ஜப்பான் படம் காமெடிப் படமாக அமைந்துள்ளது.

கார்த்தி, அனு இமானுவேல், சுனில், விஜய் மில்டன், கே.எஸ்.ரவிகுமார் ஆகியோர் ஜப்பானில் நடித்துள்ளனர். ரூபாய் 200 கோடி மதிப்புள்ள நகையை திருடிச் செல்லும் கார்தையைப் பிடிக்க முயலும் போராட்டம் தான் படத்தின் கதைக்களம். இதில் காமெடி & சென்டிமென்ட் கலந்து ஓர் கமர்ஷியல் படமாக படக்குழு தந்துள்ளது. இதற்கு விமர்சனங்கள் மிகவும் குறைவாக தான் வந்துள்ளது.

- Advertisement -

மறுபக்கம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் ராகவா லாரன்ஸ் – எஸ்.ஜே.சூர்யா காம்போ தியேட்டர்களை அதிர வைத்துள்ளது. முதல் பாகத்தைப் போலவே இயக்குனர் – கேங்ஸ்டர் இருவரையும் மையமாக வைத்து படம் நகர்கிறது. இரண்டாம் பாதி முழுக்க கார்த்திக் சுப்புராஜ் அருமையான அரசியல் பேசி க்ளைமாக்சில் நம்மை மிகவும் எமோஷனலாக்கி கண்ணில் நீரை ஊற்றச் செய்துள்ளார்.

- Advertisement -

இதான் டா சினிமா என ரசிகர்கள் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பாகத்தைக் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். நல்ல விமர்சனங்களை அடுத்து முதல் நாள் வசூலை விட அதிகம் பெற்றுள்ளது. ஆனால் ஜப்பான் படம் சற்று வீழ்ச்சியை கண்டுள்ளது. அடுத்தடுத்த நாட்களில் மிகவும் சுலபமாக கார்த்தியின் ஜப்பானை இப்படம் வென்றுவிடும்.

ஜப்பான் திரைப்படமானது முதல் நாள் 4.25 கோடியும் இரண்டாம் நாள் 3 கோடி என மொத்தம் 7.15 கோடி மொத்தமாக வசூலிதுள்ளது. முதல் நாளை விட இரண்டாம் நாள் வசூல் கம்மி என்பது பெரிய பின்னடைவு. ஆனால் ஜிகர்தண்டா படத்துக்கு அப்படியே மாற்றாக அமைந்துள்ளது. முதல் நாள் 2.5 கோடி அடுத்த நாள் 4.5 கோடி என 7 கோடிகள் இதுவரை.

மூன்றாவது நாளான தீபாவளிக்கு ஜப்பான் படத்தை கலெக்டஷனில் முந்தியுள்ளது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் படம் திரையரங்கில் மீண்டும் வந்துள்ளது. அவர் மேல் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு இணங்க இன்னும் தரமான படங்களைத் தந்துத் கொண்டே இருக்கிறார்.

Most Popular