சினிமா

இது லிஸ்டிலே இல்லயே.. ஜூனியர் என் டி ஆருடன் கை கோர்க்கும் தனுஷ்.. இயக்குனர் யார் தெரியுமா?

திரைப்பட நடிகர்கள் தற்போது தங்களுடைய மார்க்கெட்டை விரிவுபடுத்துவதற்காக மற்ற மொழிகளிலும் தங்களது படத்தை ரிலீஸ் செய்து வருகிறார்கள். நடிகர் விஜய் வாரிசு படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரை வைத்து ரிலீஸ் செய்தார்.

Advertisement

இதேபோன்று நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய படங்களை தொடர்ந்து தெலுங்கிலும் ரிலீஸ் செய்து அவருடைய மார்க்கெட்டை பெருக்கி வருகிறார். இந்த பார்முலாவை பயன்படுத்தி நடிகர் தனுஷ் வாத்தி என்ற திரைப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் செய்து ஐதராபாத்தில் நன்கு ப்ரோமோஷன் செய்தார்.

இதன் பலனாக வாத்தி திரைப்படம் தமிழ்நாட்டை விட தெலுங்கில் அதிக வசூலை பெற்றது. இதன் மூலம் தனுஷின் மார்க்கெட் கொஞ்சம் உயர்ந்துள்ளது .இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக ஒரு சூப்பர் முடிவை தனுஷ் எடுத்துள்ளார். அதன்படி இயக்குனர் வெற்றிமாறன் தெலுங்கில் பிரபல நடிகர் ஜூனியர் என்டிஆர் ஐ வைத்து ஒரு படம் இயக்க உள்ளார்.

Advertisement

இந்த படத்திற்கான கதை ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இந்த படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ட்ரிபிள் ஆர் திரைப்படம் போல் இரட்டை கதாநாயகன் சப்ஜெக்ட் ஆக இந்த படம் உருவாக உள்ளது.

இதன் மூலம் தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் தமிழில் தனுஷும் மையமாக வைத்து படம் வியாபாரம் செய்யப்படுகிறது. இதன் மூலம் இருவரும் மார்க்கெட்டும் மற்ற மற்ற மொழிகளில் உயர வாய்ப்பு இருக்கிறது. இதனால் நடிகர் தனுஷ் ஒரு காலத்தில் சூர்யா தெலுங்கு சினிமாவில் பிடித்த இடத்தை நிரப்பி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே நடிகர் தனுஷ் பாலிவுட், ஹாலிவுட் என சென்ற நிலையில் தற்போது டோலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதிக்க உள்ளார். மேலும் பொல்லாதவன் ,ஆடுகளம், வடசென்னை, அசுரன் திரைப்படத்திற்குப் பிறகு இயக்குனர் வெற்றிமாறனுடன் மீண்டும் தனுஷ் இணைய உள்ளது தமிழக ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது .ஜூனியர் என்டிஆர் உடன் நடிகர் தனுஷ் நடிக்கும் படம் அவருடைய திரைப்பட வாழ்க்கையில் அதிக வசூலை ஈட்டும் படமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top