நடிகர் அஜித்தின் 62 ஆவது படத்தை இயக்கும் வாய்ப்பு இருந்து விக்னேஷ் சிவன், நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நயன்தாராவின் கணவரும் நானும் ரௌடி தான், காத்து வாக்குல இரண்டு காதல் போன்ற படங்களை இயக்கிய விக்னேஷ் சிவன் நடிகர் அஜித்தின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். நடிகர் அஜித் திரைப்பட வாழ்க்கையில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படம் என பெயரை இது பெற்றது.
இந்த படத்தில் நடிப்பதற்காக சந்தானம், அரவிந்த் சுவாமி,அர்ஜுன் தாஸ் போன்ற நடிகர்களை நடிக்க விக்னேஷ் சிவன் அணுகினார். இந்த நிலையில் படத்தின் கதையில் திருப்தி இல்லை என்றும் விக்னேஷ் சிவனை நீக்குமாறு அஜித் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து தல 62 படத்தை இயக்கும் பொறுப்பில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டு இருக்கிறார்.
அவருக்கு பதிலாக மகிழ் திருமேனி இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது விக்னேஷ் சிவனுக்கு ஏற்பட்டுள்ள அநீதி என்றும் அவருக்கு நியாயம் வழங்க வேண்டும் என களத்தில் விஜய் ரசிகர்கள் குதித்து Justice for vignesh shivan என்று டிரெண்ட் செய்து இருக்கிறார்கள். விக்னேஷ் சிவன் தமது வாழ்க்கையில் மிகப்பெரிய வாய்ப்பாக இதை கருதியதாகவும், ஆனால் அஜித் அவருக்கு உரிய வாய்ப்பு தராமல் நம்பிக்கையை கொடுத்து பிறகு நீக்கி விட்டதாகவும் அவர்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
அஜித் ரசிகர்கள் பலரும் இந்த முடிவுக்கு வருத்தம் தெரிவித்துள்ளனர்.மங்காத்தா படம் இயக்குவதற்கு முன் வெங்கட் பிரபு மீது யாருக்கும் நம்பிக்கை இல்லை என்றும், ஆனால் அஜித்துக்கு மிகப்பெரிய வெற்றி படத்தை அவர்தான் கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ள ரசிகர்கள், இதேபோன்று விக்னேஷ் சிவனும் அஜித்துக்கு பெரிய ஹிட் படத்தை கொடுப்பார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இன்னும் சில அஜித் ரசிகர்கள் அஜித் எந்த முடிவு எடுத்தாலும் அது சரியாக இருக்கும் என்றும் அதற்கு ரசிகராக நாங்கள் முழு ஒத்துழைப்பை கொடுப்போம் என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.