Saturday, November 23, 2024
- Advertisement -
Homeசினிமாகபாலி வெளியாகி இன்றுடன் 7 ஆண்டுகள் ஆகிறது.. எவ்வளவு வசூல் படைத்தது தெரியுமா?

கபாலி வெளியாகி இன்றுடன் 7 ஆண்டுகள் ஆகிறது.. எவ்வளவு வசூல் படைத்தது தெரியுமா?

தமிழ் சினிமாவின் புரட்சிகர கருத்துக்களை கூறும் இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் முறையாக இணைந்த திரைப்படம் தான் கபாலி. 2016 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது.

- Advertisement -

மேலும் ரஜினியை வித்தியாசமான தாதா கதாபாத்திரத்தில் கபாலி காட்டப்பட்டது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் பேசிய பல வசனங்கள் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்காமல் இடம்பெற்றவை.

குறிப்பாக அடித்தட்டு மக்களுக்காக ரஜினிகாந்த் பேசும் வசனங்களுக்கு ஆதரவும் எதிர்ப்பும் தமிழகத்தில் கிளம்பின. இந்த படத்தில் தமிழ்நாட்டில் ஒரு கிளைமேக்ஸ் ஆகும் மலேசியாவில் வேறு வித கிளைமாக்ஸ் ஆகும். அந்த நாட்டு சட்ட விதிகளுக்கு ஏற்ற வகையில் மாற்றப்பட்டது.

- Advertisement -

கபாலி வந்த காலத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குமே திருவிழா கோலம் பூண்டது. இந்த நிலையில் தான் மாநிலம் வாரியாக கபாலி திரைப்படம் எவ்வளவு வசூல் சாதனை படைத்தது என்று தற்போது பார்க்கலாம்.

- Advertisement -

2016 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 74 கோடியே 30 லட்சம் ரூபாய் வசூல் சாதனை படைத்தது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 36 கோடியே முப்பது லட்சம் ரூபாய் வசூலையும் கபாலி திரைப்படம் பெற்றது.

கேரளாவில் 16 கோடி 30 லட்சம் ரூபாயும் கர்நாடகாவில் 29 கோடியே 15 லட்சம் ரூபாயும் இதுல இந்திய அளவில் 39 கோடியே 50 லட்சம் ரூபாயும் கபாலி திரைப்படம் வசூல் சாதனையை நிகழ்த்தி இருக்கிறது. வெளிநாடுகளில் 97 கோடியே 15 லட்சம் ரூபாய் வசூலை கபாலி நிகழ்த்தி இருக்கிறது.

இதன் மூலம் ஒட்டுமொத்தமாக 292 கோடியே 30 லட்சம் ரூபாய் வசூலை கபாலி பெற்றிருக்கிறது. ரஜினிகாந்துக்கு 2.0 நீங்கலாக கடைசியாக வெளி மாநிலங்களில் அதிக வசூல் பெற்ற படம் என்றால் அது கபாலி தான்.

ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் ரஜினி எந்த அளவிற்கு நம்பர் ஒன் தமிழ் நடிகராக இருந்தார் என்பதற்கு கபாலியே சான்று. ஆனால் அதன் பிறகு வெளிவந்த படங்கள் ரஜினிக்கு இத்தகைய வசூலை பெற்று தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular