தமிழ் சினிமாவில் தற்போது புதுமையான கதைகள் அடிக்கடி வந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் இதற்கெல்லாம் அடித்தளம் போட்ட திரைப்படமாக காதல் பார்க்கப்படுகிறது. பரத் ,சந்தியா போன்ற நடிகைகள் நடித்து வெளியான திரைப்படம் பட்டி தொட்டி எல்லாம் ஹிட் அடித்தது.
பாடல்கள் எல்லாம் மாபெரும் வெற்றியை பெற்றது. சாதி எவ்வாறு காதலை பிரிக்கிறது என்பதுதான் இந்த படத்தின் மைய கருத்தாகும். மெக்கானிக் பரத் பெரிய இடத்துப் பெண்ணை காதலித்து திருமணம் செய்த பிறகு பெண் வீட்டார் பரத்தை தாக்கி அவரை பைத்தியமாக ஆக்கிவிடும் நீண்ட நாள் கழித்து தெருவில் பரத் பைத்தியமாக சுற்றிக்கொண்டு இருப்பதை பார்த்து காதலி சந்தியா அழுது புலம்புவார்.
இதுதான் இந்த படத்தின் கிளைமேக்ஸ். ஆனால் இதுக்கு மாற்றாக வேறொரு கிளைமாக்ஸ் தான் பாலாஜி சக்திவேல் எழுதியிருக்கிறார். அதில் பரத்தை வில்லன்கள் பாறையில் முட்டுவதற்கு பதில் கொட்டி கிடக்கும் மணலில் உள்ளே முட்டி மூச்சு திணறி சாகடிக்க பார்ப்பார்கள்.
முதல் முறை பரத்தை மணலுள் தள்ளும்போது அவர் இறந்து விடுவார் என்ற பயத்தில் சந்தியா தாலியை கழற்றி விடுவார். ஆனால் பரத் திடீரென்று எழுந்து வில்லன்களை எல்லாம் அடித்து துவம்சம் செய்து விடுவார். வில்லன்களை வீழ்த்திவிட்டு நீ வா போகலாம் என்று சந்தியாவை அழைத்துக் கொண்டு செல்வார்.
இந்த காட்சியை தான் நான் முதலில் கிளைமாக்ஸுக்கு வைத்தேன். அப்போது இதைக் கேட்டவுடன் இதுதான் சினிமா என்று பலரும் பாராட்டினார்கள். இப்படி ஒரு கிளைமேக்ஸ் வைத்தால் நிச்சயம் படம் மாஸாக இருக்கும் என்று பலரும் கைதட்டினார்கள்.
ஆனால் எனக்கு அதில் ஒரு உடன்பாடு இல்லை ஏனென்றால் இது உண்மை கதை இப்படி ஒரு பைத்தியத்தை நான் நேரில் சந்தித்துதான் இந்த கதையை எழுதினேன். அப்படி இருக்கும்போது சமுதாயத்தில் என்ன நடக்கிறது என்பதை தெளிவாக காட்ட வேண்டும் என்பதற்காகத்தான் நான் கிளைமாக்ஸ் செய்ய மாற்றி பரத் பைத்தியமாகவது போல் காட்சியை வைத்தேன்.
கடைசியில் அதுதான் மக்களிடம் பெரியதாக பேசப்பட்டது. நான் எழுதிய காட்சியை வைத்திருந்தால் அது சினிமா என பொய்யாக மாறியிருக்கும் என்று இயக்குனர் பாலாஜி சக்திவேல் கூறியுள்ளார்.