Sunday, May 5, 2024
- Advertisement -
Homeசினிமாகாதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கன் ஒடிடியில் ரிலிஸ்.. விவரம் இதோ

காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கன் ஒடிடியில் ரிலிஸ்.. விவரம் இதோ

விருமன் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் முத்தையா காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கன் என்ற திரைப்படத்தை இயக்கினார்.இந்தத் திரைப்படத்தின் கதாநாயகனாக நடிகர் ஆர்யா நடித்திருந்தார் அவர்தான் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கன்.

- Advertisement -

மேலும் வெந்து தணிந்தது காடு என்று திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை சிதி தானே கதாநாயகியாக நடித்திருந்தார். இவர்களுடன் நடிகர் பிரபு பாக்யராஜ் ஆடுகளம் நரேன் ஆகியோர் நடித்திருந்தார்கள் திரைப்படத்தை வெடிபட்டி எஸ் சக்திவேல் தயாரித்திருந்தார் .

இத்திரைப்படத்தின் இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்தின் பாடல்கள் ஓரளவு ரசிகர்கள் மத்தியில் ஒரு வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தை விஸ் ஸ்டூடியோ மற்றும் ட்ரம் ஸ்டிக் ப்ரொடெக்ஷன் என்று தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கடந்த ஜூன் மாதம் இரண்டாம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்ட இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்து முஸ்லீம் இருவருக்கு இடையில் தோன்றும் காதலை உணர்ந்து எப்படி இருவரும் இணைகிறார்கள் என்பதைப் பற்றிய கதைகளத்தில் அமைந்திருக்கிறது காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் திரைப்படம்.

- Advertisement -

திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாக அடைந்த வெற்றியை தொடர்ந்து தற்பொழுது வருகின்ற ஜூலை மாதம் ஏழாம் தேதி ஜி5 என்ற ஓ டி டி இல் வெளியிடப்பட இருக்கிறது. திரையரங்களுக்கு சென்று திரைப்படம் பார்க்காதவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.

ஆனால் இந்தத் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை சமூகத்திற்கு தேவையான கருத்தை இயக்குனர் முத்தையா சொல்லி இருந்தாலும் படத்தின் திரைக்கதையின் சொதப்பிவிட்டார். இந்து, முஸ்லிம் ஒற்றுமையை உணர்த்தும் வகையில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ஓடிட்டியளாவது வெற்றி பெற வேண்டும் என்பது தயாரிப்பாளரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Most Popular