சினிமா

திருமணம் ஆனதும் மார்க்கெட்டை இழக்கும் காஜல் அகர்வால் ! மீண்டும் எப்போது நடிப்பார் தெரியுமா ?

Kajal Agarwal

மெழுகு டால், முட்டை கண்கள், அழகிய தோற்றம் என ரசிகர்களை கவர்ந்த நடிகை காஜல் அகர்வால், தற்போது அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகளை இழந்து வருகிறார். தமிழில் பொம்மலாட்டம் திரைப்படம் மூலம் அறிமுகமான காஜல் அகர்வால், தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் டாப் நடிகையாக திகழ்ந்து வந்தார். நடிகர் விஜயுடன் துப்பாக்கி ,ஜில்லா, மெர்சல் என மூன்று படங்களில் நடித்து பலரின் ஃபேவரிட் நடிகையாக காஜல் அகர்வால் திகழ்ந்தார். இந்த நிலையில் காஜல் அகர்வாலுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு கவும் கிச்லு என்பவருடன் திருமணம் ஆனது.

இதனை அடுத்து அவருக்கு வந்த திரைப்பட வாய்ப்புகள் குறைய தொடங்கின. மேலும் அவர் கர்ப்பமானதால் தெலுங்கில் நடித்து வந்த ஆச்சார்யா படத்தில் இருந்தும் அவர் நீக்கபட்டார் . மேலும் அவர் நடித்த சில காட்சிகளையும் பல குழு நீக்கிவிட்டது. கொரோனாவுக்கு முன்பு நடித்த ஹே ச
ஷினாமிக்கா என்ற திரைப்படம் மட்டும் தான் நடிகை காஜல் அகர்வாலுக்கு தற்போது வெளிவந்துள்ளது. இந்த நிலையில் காஜல் அகர்வாலுக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. தற்போது குழந்தையுடன் தனது நேரத்தை காஜல் அகர்வால் செலவழித்து வருகிறார்.

தற்போது படம் வாய்ப்பு இல்லாத நிலையில் அவர் மீண்டும் திரைக்கு நடிக்க வருவாரா என்ற சந்தேகம் அவர்களது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனிடையே மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்தியன் 2 திரைப்படத்தில் காஜல் அகர்வால் நடித்துக் கொண்டிருந்தார் . தற்போது அந்தப் படம் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதில் காஜல் நடிக்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்து விட்டதால் தற்போது அவருக்கு பதிலாக வேறு நடிகையை வைத்து படம் எடுக்க இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டுள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து பின் திருமணமானதால் பட வாய்ப்பு இல்லாமல் போன நடிகை தேவயானி, சிம்ரன், லைலா, சினேகா போன்றோர் வரிசையில் காஜல் அகர்வால் இணைந்து விட்டதாக ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தற்போது அவர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை நடிகை நயன்தாரா மட்டும்தான்.. அவரும் சென்று விட்டால் 90ஸ் கிட்ஸ் நிலைமை அவ்வளவுதான்.

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது.

TOP STORIES

To Top