சினிமா

தமிழ் சினிமாவின் பெரிய இயக்குனருக்கு டிமிக்கி கொடுத்தாரா கமல்??

கடந்த வருடம் வெளியான விக்ரம் திரைப்படம் சென்ற வருடத்தின் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்தத் திரைப்படத்தில் கமல்ஹாசன் பகத் பாசில் விஜய் சேதுபதி உள்ளிட்ட பல முன்னாடி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்த இந்த திரைப்படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். சிறிது காலம் திரையுலகில் இருந்து விலகி இருந்த கமல்ஹாசனுக்கு இந்தத் திரைப்படம் ஒரு மிகப் பெரிய கம் பேக் என்றே கூறலாம். இந்தத் திரைப்படத்தில் பணியாற்றிய இயக்குனர்கள் மற்றும் நடிகர்களுக்கு பரிசு வழங்கிய கௌரவித்திருந்தார் கமல்.

விக்ரம் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து தற்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் சூட்டிங் கடந்த வருடமே ஆரம்பித்து இருந்தாலும் சில காரணங்களால் நின்று போனது. விக்ரம் படத்திற்கு பிறகு தற்போது முன்புறமாக நடைபெற்று 90 சதவீதம் படப்பிடிப்பு முடிந்து விட்டது. மீதி இருக்கும் பத்து சதவீதம் படப்பிடிப்பும் மே மாதத்தில் நடத்தி முடிக்கப்படும் என தெரிகிறது . இதனைத் தொடர்ந்து தனது அடுத்த படங்கள் பற்றி முடிவெடுக்க இருக்கிறார் கமல். இந்தியன் 2 திரைப்படத்திற்கு பிறகு மணிரத்தினம் மற்றும் பா ரஞ்சித் ஆகியோருடன் இணைந்து பணியாற்ற உள்ளார் என்ற செய்திகள் வெளியானது. மணிரத்தினிடம் பேச்சு வார்த்தை நடத்தி கிட்டத்தட்ட படம் முடிவு செய்யப்பட்டது என்றே கூறலாம்.

Advertisement

தற்போது இதனைப் பற்றிய செய்திகள் வேறு விதமாக வலம் வருகின்றன. அந்த செய்திகளின்படி கமல்ஹாசன் மே மாதம் இந்தியன் 2 படப்பிடிப்பை முடித்துவிட்டு தனது ஓவிற்காக அமெரிக்கா செல்ல இருக்கிறார். மேலும் அடுத்து நடக்கவிருக்கும் படத்திற்கு கெட்அப் மாற்றம் மற்றும் சிகை அலங்காரத்தில் செய்ய வேண்டிய மாற்றங்கள் ஆகியவற்றிற்காக அந்த ஓய்வு நேரங்களை செலவிட போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அமெரிக்காவிலிருந்து வந்து ஜூலை மாதம் தனது புதிய படத்திற்கான பணிகளை தொடங்க இருப்பதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கமல்ஹாசனின் புதிய படம் மணிரத்தினத்துடன் தான் இருக்கும் என்று உறுதியான நிலையில் அவருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு துணிவு படத்தை இயக்கிய எச். வினோத்துடன் இணைந்து பணியாற்ற இருப்பதாக கோலிவுட்டின் நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகிறது இந்த செய்திகளின்படி கமல்ஹாசன் எச் வினோத்திற்கு தனியாக ஒரு ஆபீஸ் அமைத்து கொடுத்து இருக்கிறாராம். மேலும் அவருக்கு ஒரு விலை உயர்ந்த காரையும் பரிசாக கொடுத்திருக்கிறார் என அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

Advertisement

இவை எல்லாவற்றையும் வைத்து பார்க்கும் போது கமல்ஹாசன் அடுத்த படத்தை எச்.வினோத் தான் இயக்குவதாக தெரிகிறது என அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. கமல்ஹாசன் தனது விக்ரம் படத்தின் வெற்றியை அப்படியே தொடர நினைப்பதாகவும் அதற்காக இளம் இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்ற வரும் போது ஆகவும் அந்த செய்திகள் தெரிவித்துள்ளன. இன்று நடைபெற்ற பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top