சினிமா

உலக நாயகன் கமல்ஹாசனின் அடுத்த 4 ப்ரோஜக்ட் ! களத்தில் குதிக்க ரெடி

Kamal Haasan

உலகநாயகன் கமலஹாசன் தமிழ் சினிமாவில் தனது இடத்தை மீண்டும் விக்ரம் திரைப்படத்தின் மூலம் உறுதி செய்துள்ளார். விக்ரம் கொடுத்த வெற்றி நடிகர் கமல்ஹாசனுக்கு புது புத்துணர்ச்சியை தந்துள்ளது. விக்ரம் திரைப்படம் ரிலீஸ் ஆகி தமிழகத்தில் மட்டும் 182 கோடி தற்போது வரை வசூல் செய்துள்ளது. படம் ஓடிடியில் ரிலீசானாலும் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் நிரம்புகிறது.

விக்ரம் திரைப்படம் கொடுத்த வெற்றியால் மகிழ்ச்சியில் உள்ள கமல்ஹாசன் முன்பை விட தற்போது மிகுந்த உற்சாகத்துடன் பணியாற்ற இருக்கிறார். நடப்பாண்டில் மட்டும் கமல்ஹாசன் நிறைய ப்ராஜெக்டுகளை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கமலஹாசனை அடுத்த தலைமுறைக்கும், பெண்கள் ரசிகர்களுக்கும் கொண்டு சேர்த்தது பிக் பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சி தான். ஆனால் கடந்த முறை ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் அல்டிமேட்டில் கமல்ஹாசன் பாதியில் இருந்து விலக, நடிகர் சிம்பு அந்தப் பணியை மேற்கொண்டார்.

இதனால் நடிகர் கமல்ஹாசன் இம்முறையும் பிக் பாஸ்க்கு திரும்புவாரா என சந்தேகம் இருந்த நிலையில் ,தற்போது கமல்ஹாசன் தான் பிக் பாஸை தொகுத்து வழங்க இருக்கிறார் என்பது உறுதியாகி உள்ளது. பிக் பாஸ் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் வழக்கம் போல் வார இறுதி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் கமல், சில ஆண்டுகளுக்கு முன் பல தடைகளால் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 திரைப்படத்தில் வார நாட்களில் மீண்டும் நடிக்க இருக்கிறார். இதற்கான லுக்கில் கமல்ஹாசன் மாற இருக்கிறார் .

இயக்குனர் சங்கர் விரைவில் இந்தியன் 2 படத்தை துவக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன . இதனைத் தொடர்ந்து இயக்குனர் மகேஷ் நாராயணன் கமல்ஹாசனை வைத்து புதிய படம் ஒன்றை தொடங்க இருக்கிறார். கேரளாவில் ஃபகத் பாசிலை வைத்து மாலிக் என்ற திரைப்படத்தை மகேஷ் நாராயணன் இயக்கினார். அது ரசிகர்களுடைய பெரும் வரவேற்பு பெற்றது. இதனை தொடர்ந்து கமலுடன் அவர் பணியாற்ற இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதன் பிறகு விக்ரம் திரைப்படத்தின் அடுத்த பாகம் மற்றும் பா.ரஞ்சித்தின் மதுரையை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ள புதிய படத்திலும் நடிகர் கமல்ஹாசன் நடிக்க உள்ளார்.

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

TOP STORIES

To Top