Friday, November 22, 2024
- Advertisement -
Homeசினிமா“ அன்று விஸ்வரூபம் படத்தில் என்னை எதிர்த்தனர்.. ஆனால் இன்று அதை தான் எல்லாரும் செய்கிறார்கள்...

“ அன்று விஸ்வரூபம் படத்தில் என்னை எதிர்த்தனர்.. ஆனால் இன்று அதை தான் எல்லாரும் செய்கிறார்கள் ” – கமல் ஹாசன் பேச்சு.. !

இந்திய சினிமாவில் நடிப்பாலும் எழுத்தாலும் இயக்கத்தாலும் பெரிய படைப்புகளை கொடுத்தவர் கமல் ஹாசன். அண்மையில் ‘ இந்திய சினிமாவின் சிறந்த சாதனையாளர் ’ என்ற மகத்தான ஐஃபா விருதையும் வென்றார். இன்று நாம் சினிமாவில் காண்பதை 20 ஆண்டுகளுக்கு முன்னரே ஆண்டவர் கமல் கணித்திருப்பார் என்பது நாம் அறிந்த ஒன்று தான். உதாரணம் நான் இன்று கொண்டாடும் அன்பே சிவம், ஆளவந்தான் போன்ற படங்கள்.

- Advertisement -

விஸ்வரூபம் திரைப்படம் வெளியான போது பல்வேறு குற்றச்சாட்டுகள் கமலின் மேல் விழுந்தது. மேலும் அந்தப் படத்தை திரையரங்கில் விடாமல் நேரடியாக தொலைக்காட்சியில் விடவும் எண்ணினார். அப்பணிகள் எல்லாம் ஓரளவு சரியாக சென்று கொண்டிருந்த போது ரத்தானது. யாருமே கமலின் முயற்சிக்கு ஒத்துழைக்கவில்லை. ஆனால் இன்று அவர் சொன்ன வழியில் தான் சினிமா பயணிக்கிறது.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “ இந்த ஓடிடி தளத்தின் வருகையை யாவருக்கும் முன்பே நான் அறிந்து கொண்டேன். அதைப் பற்றி நான் பேசிய போது யாரும் எனக்கு ஆதரவளிக்கவில்லை. இன்று அது அனைவருக்கும் புரிந்துள்ளது. அதோடு நம் மக்களுக்கு சர்வதேச படங்களின் ரசனையும் கிடைத்துள்ளது. ” என்றார்.

- Advertisement -

மேலும், “ நான் சினிமா விரும்பி. நான் என்னை வைத்துப் பார்க்கும் படங்களை தான் தயாரிப்பேன். சில முறை நான் அப்படன்களில் நடிக்காமல் கலந்து கொள்வேன். இப்போது கூட 2 படங்களை தயாரிக்கிறேன். அதில் நான் வெறும் பணத்தை மட்டுமே செல்விடுகிறேன். ” என்றார் கமல் ஹாசன்.

- Advertisement -

புதிய டெக்னாலஜி மற்றும் புதிய வித திரைக்கதை என சினிமாவின் கோணமே மாறிய நிலையில் புதிய இளம் இயக்குனர்களை வளர்ப்பது தயாரிப்பாளர்களின் கூடுதல் வேலை அல்லவா என்பது குறித்த கேள்விக்கு கமல் ஹாசன் அருமையான பதில் கொடுத்துள்ளார். “ உதாரணத்திற்கு நீங்கள் எம்.ஏ இலக்கியம் படித்திருப்பதால் திரைக்கதை எழுதிவிட முடியாது, வெறும் பட்டம் பெற்றவராகவே கருதப்படுவர். ”

“ சினிமா வித்தியாசமான வேறு கலை. இன்று செக்ஷ்பியர் இருந்திருந்தால் கலை குறித்து பாடங்கள் எடுத்திருப்பார். தயாரிப்பாளர்கள் மட்டும் அல்ல சினிமா துறையே திரைமகளை வளர்ப்பதில் எந்த முயற்சியும் காட்டவில்லை. நான் இதில் என்னையும் சேர்த்து தான் கூறுகிறேன். கிரிக்கெட் கற்றுக்கொள்ள தெருவுக்கு ஓர் கூடம் உள்ளது ஆனால் சினிமாவுக்கு

Most Popular