சினிமா

எப்பா இத்தனை தரமான படங்களா ! நாயகன் கமல் ஹாசனின் அடுத்தடுத்த படங்களின் பட்டியல் !

Kamal Haasan Maniratnam and H Vinoth

சினிமாவின் ஆண்டவர் கமல் ஹாசனின் 68வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது 234வது படத்தின் அப்டேட் ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியானது. 35 வருடங்களுக்குப் பின் இயக்குனர் மணிரத்னம் அவர்களுடன் உலகநாயகன் இணைவதாக வந்த செய்தி சமூக வலைதளங்களில் டிரெண்டிங் நம்பர் 1 ஆனது. இருவரும் கடைசியாக நாயகன் படத்தில் ஒன்றாக பணிபுரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் தலைப்பு இன்னும் முடிவு செய்யப்படாமல் இருப்பதால் தற்காலிகமாக கே.எச் 234 என்று அழைக்கப்படுகிறது. இப்படத்தை ஆர்.கே.எஃப்.ஐ உரிமையாளர் கமல் ஹாசன் – மணிரத்னம் – மகேந்திரன் – சிவா ஆனந்த் ஆகியோர் தயாரிக்கின்றனர். மணிரத்னம் படம் என்பதால் வழக்கம் போல ஏ.ஆர்.ரஹ்மான் இசை வேலைகளை செய்கிறார். 2024ஆம் ஆண்டு வெளியாகும் என்றும் அறிவித்துவிட்டார்கள்.

Advertisement

விக்ரம் படத்தின் மூலம் பலத்த கரகோஷத்துடன் வெளிவந்த நாயகன் அடுத்தடுத்து அபார இயக்குனர்களுடன் இணைகிறார். அந்தப் பட்டியலைக் காணும் போதே “ இந்தப் படம் எப்போது வரும், அது எப்போது வரும், காத்திருக்க பொறுமை இல்லை ” எனடிரா நிலைக்கு தள்ளுகிறது.

உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது பாதியிலேயே நின்ற ஷங்கரின் இந்தியன் 2 படத்தை நிறைவு செய்து கொண்டிருக்கிறார். அதன் பின் அவர் நடிக்கவிருக்கும் படங்களின் பட்டியல் இதோ.

Advertisement

இயக்குனர் ஷங்கருடன் இந்தியன் 2.
இயக்குனர் மகேஷ் நாராயணனுடன் ஓர் படம்.
இயக்குனர் பா.இரஞ்சித்துடன் ஓர் படம்.
இயக்குனர் மணிரத்னத்துடன் கே.எச் 234.
லோகேஷ் கனகராஜுடன் விக்ரம் 2.

இது தவிர இன்று காலை முதல், கமல் ஹாசன் அடுத்ததாக இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அரசியல் சம்மந்தப்பட்ட படம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியானது. அதற்கும் அதிகம் வாய்ப்புகள் உள்ளது. ஏற்கனவே இயக்குனர் வினோத் நடிகர் கமல் ஹாசனைச் சந்தித்து கதையைப் பற்றி பேசிவிட்டனர் என்று கூறுகின்றனர்.

பல வருடங்களாக தரமான படங்களை தர இயலாமல் தவித்த கமல் அவரது ரசிகர் இயக்கத்தில் விக்ரம் எனும் பிரம்மாண்ட படத்தில் நடித்து திரையரங்குகளை அதிர வைத்தது. அடுத்து அவர் நடிக்கவிருக்கும் படங்களும் திறமையான இயக்குனர்கள் என்பதால் அவரது படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top