Thursday, May 2, 2024
- Advertisement -
Homeசினிமாவில்லனாக நடிக்க ஒப்பு கொண்டது ஏன்? எளிதில் புரியும் படி கமல்ஹாசன் விளக்கம்

வில்லனாக நடிக்க ஒப்பு கொண்டது ஏன்? எளிதில் புரியும் படி கமல்ஹாசன் விளக்கம்

இயக்குனர் நாகஸ்வினி இயக்கத்தில் கல்கி 2898 ஏ டி என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.இந்த திரைப்படத்திற்கு ஆரம்பத்தில் ப்ராஜெக்ட் என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருந்தது.

- Advertisement -

இந்த திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரமாக நடிகர் பிரபாஸ் நடித்து வருகிறார். மேலும் அவருடன் இணைந்து தீபிகா படுகோன் அமிதாபச்சன் திஷா பத்தாணி போன்ற பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.

பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வரும் இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு ஏற்கனவே ஒரு பெரிய ஆர்வம் இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் வில்லனாக உலக நாயகன் கமலஹாசன் நடித்து வருகிறார் இது ரசிகர்கள் மத்தியில் திரைப்படத்தின் மீது பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

சில நாட்களுக்கு முன்பு இந்த திரைப்படத்தின் உடைய அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் பிரபல நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் ப்ராஜெக்ட் கே என்று சொல்லப்பட்ட பல்கி திரைப்படத்தின் உடைய பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.

- Advertisement -

அந்த நிகழ்ச்சியில் தான் இத்திரைப்படத்திற்கு கல்கி என்று பெயர் வைத்திருப்பதாகவும் அறிவித்தார்கள். மேலும் இந்தத் திரைப்படத்தில் உள்ள பிரபலங்கள் பேசிய பொழுது நடிகர் கமலஹாசன் வில்லனாக நடிப்பது பற்றி கூறியிருந்தார். சினிமாவில் வில்லன் இல்லாவிட்டால் ஹீரோ இல்லை .

எல்லா திரைப்படத்திலும் வில்லன் கதாபாத்திரம் மிக முக்கியமானது. ஒரு வில்லன் சிறப்பாக இருந்தால் அவனை வென்ற அந்த ஹீரோவும் சிறப்படைவான் என்ற பாணியில் உலக நாயகன் கமலஹாசன் தான் வில்லனாக நடிப்பது பற்றி விளக்கம் அளித்தார்.

மேலும் அவர் குறுகிய காலம்தான் திரைப்படத்தில் நடிக்கப் போவதற்கான நேரம் கொடுத்திருக்கிறார். அதற்குள் அவருடைய பகுதியை சிறப்பாக நடிப்பார் வருகின்ற பொங்கலுக்கு இந்த திரைப்படம் வெளியிடப்பட இருப்பதால் அதற்கான வேலையில் பட குழுவினர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்

Most Popular