Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமாதளபதி 67ல் விஜய்யுடன் நடிக்கும் கமல்.. இன்னும் பல ஆச்சரிய தகவல்கள்

தளபதி 67ல் விஜய்யுடன் நடிக்கும் கமல்.. இன்னும் பல ஆச்சரிய தகவல்கள்

- Advertisement -

ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தி இருக்கும் தளபதி 67 திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த திரைப்படம் விக்ரம், கைதி படத்தின் தொடர்ச்சியாக அமையலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஏற்கனவே இந்த படம் அதன் தொடர்ச்சியாக தான் இருக்கும் என்றும் அப்படி இருந்தால் தான் அதில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக பகத் பாசில் கூறியிருந்தார்.

தற்போது அதன் தொடர்ச்சியாக நடிகர் கமல்ஹாசனின் முக்கிய ரோலில் நடிகர் விஜய் உடன் இணைந்து நடிக்க இருப்பதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் சொன்ன கதை நடிகர் கமல்ஹாசனுக்கு மிகவும் பிடித்து விட்டதாகவும் விஜய்க்காக தான் இந்த ரோலில் நடிக்க இருப்பதாகவும் அவர் ஒப்புக்கொண்டதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

இதே போன்று விக்ரம் பாணியில் தளபதி 67 படத்திற்கும் டீசர் ஒன்று நடிகர் விஜய் வைத்து லோகேஷ் கனகராஜ் படப்பிடிப்பு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த டீசரை பார்த்து நடிகர் விஜய் பெரும் மகிழ்ச்சி இருப்பதாகவும் தெரிகிறது. திரைப்பட குழு கொடைக்கானலில் இரவு நேர படப்பிடிப்பில் ஈடுபட்டு இருக்கிறது. இந்த பணி முடிவடைந்த நிலையில் சிறு ஓய்வுக்கு பிறகு காஷ்மீருக்கு படக்குழு செல்ல இருக்கிறது. அங்கு ஒரு செடியூல் முழுமையாக நடைபெறும் என தெரிகிறது.

- Advertisement -

தளபதி 67 படத்தில் இன்னும் நிறைய நிறைய நிறைய ஆச்சரியங்கள் ரசிகர்களுக்காக காத்திருப்பதாக கோலிவுட் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தளபதி 67 படத்தில் விஜயுடன் கமல் இணைந்தால் பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்ன ஆகும் என்று நாம் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை. தளபதி 67 திரைப்படத்தை அக்டோபர் மாதம் பூஜை விடுமுறை மையமாக வைத்து ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருவதால் அப்போது படத்தை ரிலீஸ் செய்வதன் மூலம் எந்த பயனும் இல்லை என்பதற்காக இந்த தேதி முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Most Popular