Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசினிமாமணிரத்னம்- கமல் திரைப்படம் தொடர்பான அப்டேட்.. எப்போது ரிலீஸ்

மணிரத்னம்- கமல் திரைப்படம் தொடர்பான அப்டேட்.. எப்போது ரிலீஸ்

தமிழ் சினிமாவின் காலத்தால் அழியாத திரைப்படங்களில் நாயகன் திரைப்படமும் ஒன்று. திரைப்படத் துறைக்கு நடிக்க இல்லை படத்தை இயக்க வரும் கலைஞர்களுக்கு நாயகன் திரைப்படம் ஒரு வழிகாட்டி போன்றது.

- Advertisement -

மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்த திரைப்படம் வரலாற்று வெற்றியை பெற்றது. கிளாசிக் கல்ட் அந்தஸ்தை பெற்ற நாய்கள் திரைப்படத்திற்கு பிறகு கமல்ஹாசன் மணிரத்தினம் மீண்டும் இணைய உள்ளது, தமிழக ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -

இது கமல்ஹாசனின் 234-வது திரைப்படம் ஆகும். கமல்ஹாசன் விக்ரம் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்தியன் படத்தில் பணியாற்றி வருகிறார். இந்த படம் ஷூட்டிங் முடியும் தருவாயில் உள்ளது.

- Advertisement -

இதைப் போன்று மணிரத்னமும் பொன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து மிகுந்த குஷியுடன் இருக்கிறார். இதன் காரணமாக சூட்டோடு சூடாக கமல் திரைப்படத்திற்கான திரைக்கதையை தற்போது தீவிரமாக எழுதி வருகிறார்.

இதற்காக மணிரத்தினம் படக் குழு தற்போது கொடைக்கானலில் முகாமிட்டு படத்தின் கதையை எழுதி வருகிறார்கள். இந்த நிலையில் படத்தின் கதை எழுதி முடிக்க இந்த ஆண்டு இறுதி ஆகி விடும். அதன் பிறகு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஷூட்டிங் செல்ல உள்ளனர். இதை அடுத்து திரைப்படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காலகட்டத்தில் கமல்ஹாசன் இந்தியன் 2 திரைப்படத்தை முடித்துவிட்டு பிரபாஸ் படத்திற்கு வில்லனாகவும் நடிக்க இருக்கிறார். அந்த படத்திற்கு அவர் வெறும் 20 நாட்கள் தான் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மணிரத்தினம் படத்தைத் தொடர்ந்து பா ரஞ்சித் வினோத் மற்றும் விக்ரம் டு படத்தில் கமல் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular