Sunday, September 15, 2024
- Advertisement -
Homeசினிமாகமல்ஹாசன் - மணிரத்னம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் & புரோமோ அப்டேட்.. !

கமல்ஹாசன் – மணிரத்னம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் & புரோமோ அப்டேட்.. !

பல ஆண்டுகளுக்குப் பின் தன் ரசிகர் மற்றும் இயக்குநருமான லோகேஷ் கனகராஜ் தலைமையில் விக்ரம் படத்தின் மூலம் மாபெரும் கம்பேக்கை கொடுத்தார் கமல்ஹாசன். உடனே அடுத்தடுத்த படங்களிலும் நடிக்க ஒப்பந்தம் ஆகி அந்தப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

- Advertisement -

தற்போது அவர் ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் நடித்துவருகிறார். இந்தத் திரைப்படம் பல ஆண்டுகள் கிடப்பில் கிடந்து மீண்டும் உயிர்த்தெழுந்து செயல்படுகிறது. அடுத்த ஆண்டு கோடைக்கு இதனை எதிர்பார்க்கலாம். இது தவிர பிரபாஸ் நடிக்கும் பிராஜெக்ட் கே படத்தில் பல வருடங்கள் கழித்து வில்லனாக நடிக்கிறார்.

அதன் பின்னர் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒர் படம் மற்றும் மணிரத்னம் அவர்களுடன் 38 ஆண்டுகளுக்குப் பின் இணைகிறார். இது தான் கமல்ஹாசன் கையில் இருக்கும் அடுத்த பெரிய படங்கள். இந்தப் பட்டியலில் இருக்கும் கடைசிப் படத்தின் அறிவிப்பு மட்டுமே வெளியானது. வேறு எந்த வித அப்டேட்டும் இல்லை.

- Advertisement -

மணிரத்னம் – கமல்ஹாசன் கைகோர்க்கும் இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவரும் இணைந்து தயாரிக்கின்றனர். மணிரத்னம் படம் என்பதால் வழக்கம் போல ஏ.ஆர்.ரஹ்மான் இசைப் பகுதியைப் பார்க்கிறார். கமல்ஹாசனின் 234வது படமாக இது அமைகிறது.

- Advertisement -

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் புரோமோ இரண்டுமே அடுத்த மாதம் நவம்பர் 7ஆம் தேதி கமல்ஹாசனின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என செய்திகள் வந்துள்ளன. அதில் படத்தின் களத்தை அறியலாம். தற்போது கிடைத்துள்ள தகவலின் படி இந்தப் படம் அரசியல் சார்ந்த படம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமல்ஹாசன் 234 படத்தில் அவரைத் தவிர மற்ற நடிகர்களின் பட்டியல் இன்னும் அதிகாரபூர்வமாக வரவில்லை. இரு மாதங்களுக்கு முன்னர் இன்னும் இரு பெரிய நடிகர்கள் இணையவிருக்கிரார்கள் என தகுந்த வட்டாரங்களில் பேசினர். அவர்கள் துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆவர். இவர்கள் நடிப்பது உறுதி இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு மட்டுமே பாக்கி.

Most Popular