Saturday, November 23, 2024
- Advertisement -
Homeசினிமாமுடியல சாமி..! முனி 5 , காஞ்சனா 4 படத்தை எடுக்கப் போகும் ராகவா லாரன்ஸ்

முடியல சாமி..! முனி 5 , காஞ்சனா 4 படத்தை எடுக்கப் போகும் ராகவா லாரன்ஸ்

- Advertisement -

தமிழ் சினிமாவில் பேய் படத்தை வைத்து மிகப்பெரிய ஹிட் படங்களை கொடுத்தவர் என்றால் அது ராகவா லாரன்ஸ் தான். 2007 ஆம் ஆண்டு முனி என்ற திரைப்படத்தை எடுத்து அதன் பிறகு தொடர்ந்து காஞ்சனா என மூன்று பாகங்களை கொடுத்து  ராகவா லாரன்ஸ் கொடுத்துள்ளார். ஒரு சாதாரண பேய் படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்யும் என்று யாருமே எதிர்பார்க்காததை ராகவா லாரன்ஸ் செய்து காட்டியிருக்கிறார்.

இது அனைத்தும் ஒரே காதல் ஆட்சி அமைப்பையும் கொண்டதாகவே இருக்கும் கடைசியாக காஞ்சனா படம் 2019 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது அதன் பிறகு கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் ராகவா லாரன்ஸ் திரைப்படத்தில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.  தற்போது மீண்டும் பல்வேறு திரைப்படங்களில் ராகவா லாரன்ஸ் நடித்த வருகிறார். தற்போது ருத்ரன் என்ற திரைப்படம் வரும் 14ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இதனை அடுத்து சந்திரமுகி 2 என்ற திரை படத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார்.

- Advertisement -

இந்தப் படத்தை பி வாசு இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதன் பிறகு ராகவா லாரன்ஸ் துர்கா என தனி ஒரு பேய் படத்தை எடுத்து வருகிறார். இது காஞ்சனா படத்தில் வருமா என்று கேள்வி கேட்கப்பட்டதற்கு இது தனிவகை படம் என ராகவா லாரன்ஸ் கூறினார். இந்த நிலையில் பெரும் எதிர்பார்க்கப்பட்ட காஞ்சனா படத்தின் நான்காவது பாகமும் முனி படத்தின் ஐந்தாவது பாகமும் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

- Advertisement -

இதற்கான திரைக்கதை எழுதும் பணியை தான் மேற்கொண்டு வருவதாகவும் தான் நடிக்க இருக்கும் படங்களை முடித்த பிறகு விரைவில் அதற்கான பணியை தொடங்கி விடுவதாகவும் ராகவா லாரன்ஸ் கூறியிருக்கிறார். 2024 ஆம் ஆண்டு பிற்பகுதியில் இந்த படம் ரிலீஸ் ஆகலாம் எனவும் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் லோகேஷ் கனகராஜ் திரைக்கதையில் ரத்தினகுமார் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. காஞ்சனா திரைப்படத்திற்கு வரவேற்பு இருந்தாலும் ஒரே கதையை வைத்து எவ்வளவு பேய் படம் சாமி எடுப்பீங்க அப்படி என்று ரசிகர்களும் கிண்டல் அடித்து வருகின்றனர்.

Most Popular