சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் அடுத்தப் படமான ஜெயிலர் விரைவில் வெளியாகவிருக்கிறது. நெல்சனின் இயக்கத்தில் ஒரு வருடமாக ஷூட்டிங்கில் இருந்த படம் அனைத்துப் பணிகளையும் நிறைவு செய்து ரிலீசுக்கு காத்திருக்கிறது. படத்தின் புரொமோஷனுக்காக அடுத்தடுத்து அப்டேட்களை வழங்கி வருகிறது படக்குழு.
அனிருத் இசையில் தமன்னாவின் அசத்தலான நடத்தில் ‘ காவாலா ’ எனும் முதல் பாடல் வெளியானது. சூப்பர் ஹிட்டான அப்பாட்டிற்குப் பின் ரஜினிக்காகவே ‘ ஹுக்கும் ’ என்ற மிரட்டலான பாடல் ரீலீஸ் ஆனது. முதல் பாடலை விட இப்பாட்டிற்கே வரவேற்பு அதிகம்.
அடுத்ததாக படக்குழு மீதம் இருக்கும் பாடல்களையும் டீசர், டிரெய்லர் மற்றும் ஓர் பெரிய நிகழ்ச்சிக்கு திட்டமிட்டுள்ளது. ரஜினியின் திரையுலக ஆண்டுவிழாவை கொண்டாடும் வகையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர் உலகெங்கும் திரைக்கு வருகிறது.
ஜெயிலரில் பீஸ்ட் வடை அடிக்குதா ?
இரண்டாவது சிங்கிளின் புரோமோவில் பீஸ்ட் அறிவிப்பு வீடியோவில் வந்தது போலவே பல வகை துப்பாக்கிகள் இடம்பெற்றன. இப்படமும் பீஸ்ட்டைப் போலவே முக்கவாசி கதை ஒரே நாளில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஜெயிலர் கதை குறித்து இணையதளத்தில் கசிந்த செய்திகளும் அதையே கூறுகின்றன.
இணையலததில் கசிந்த ஜெயிலர் கதை
ஜெயிலர் படத்தின் தலைப்பிற்கு ஏற்ப படத்தில் ரஜினிகாந்த் ஜெயில் வார்டனாக வருகிறார். மிகப் பெரிய தாதா கும்பலை போலீஸ் பிடித்துச் சென்று ஜெயிலில் அடைக்க அவர்களைக் காப்பாற்ற அக்கும்பலைச் சேர்ந்தவர்கள் ஜெயிலுக்குள் படையெடுத்து வருகின்றனர். அவர்களை தடுத்து நிறுத்துவதே ஜெயிலரின் பணி.
இது இல்லாமல் வேறு ஒரு கதையும் பரவியது. எது உண்மை என படத்தைப் பார்த்தால் தான் தெரியும். இரண்டாவதாக வெளியான தகவலின் படி அந்த பெரிய ரவுடி கும்பல் ஜெயிலுக்கு ஷூட்டிங் செய்ய வந்தவர்களை துன்புறுத்த அவர்களுக்கும் ரஜினிக்கும் நடக்கும் சண்டையே படம் என்கின்றனர்.
ஜெயிலர் வில்லன் யார் ?
ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த்துடன் ஓர் நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. மோகன்லால், ஷிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப், சுனில் வர்மா, ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, யோகி பாபி மற்றும் பலர் என பெரிய லிஸ்ட் இருக்கிறது. இதில் கன்னட நடிகரான ஷிவராஜ் குமார் தான் ரஜினிக்கு வில்லன் என்பது அதிகாரபூர்வமாக உறுதியாகியுள்ளது.
இரு வேறு மொழியின் சூப்பர்ஸ்டார்கள் நேருக்கு நேர் மோதும் இப்படத்தில் ஹீரோ – வில்லன் காம்போ மிகவும் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டரை மணி நேர படத்தில் இத்தனை நடிகர்களுக்கும் ஸ்கிரீன் ஸ்பேஸ் கிடைப்பது சவாலான விஷயம். அதை நெல்சன் எவ்வாறு கையாண்டுள்ளார் என்பதை ரிலீசுக்கு பின்னரவே தெரிந்துகொள்ள முடியும்.