ஜிப்ஸி, ஜோக்கர், கூக்கூ போன்ற நல்ல.திரைப்படங்களை அளித்துள்ள இயக்குனர் ராஜு முருகன் தன் அடுத்த படத்தை நடிகர் கார்த்தியை வைத்து இயக்கி வருகிறார். கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடிக்க படத்தில் சுனில், விஜய் மில்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் சற்று பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது. கார்த்தியின் 25வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் ஷூட்டிங் இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் இந்த பணிகள் முடிந்த பின் போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் புரொமோஷனில் கவனம் செலுத்தவுள்ளது.
இரு மாதங்களுக்கு முன் கார்த்தியின் ஜப்பானும் நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன் படமும் ஜூன் 31ஆம் தேதி மோதவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அது எதுவும் பலிக்கவில்லை. முதலில் ஆகஸ்ட் 11 என அறிவித்து பின்னர் சூப்பர்ஸ்டாரின் ஜெயிலர் படம் குறுக்கிட்டதால் முன் வந்து ஜூலை 14ஆம் தேதி உலகெங்கும் திரையிடப்படுகிறது.
ஜப்பான் படக்குழுவினரும் தீபாவளிக்கு வெளியிடுவதாக அறிவித்தனர். அங்கும் சிவகார்த்திகேயனுடன் மோதல் தான். பெரும் எதிர்பார்ப்பான அயலான் தீபாவளிக்கு வெளியாகிறது. தீபாவளிக்கு மொத்தம் 4 பெரிய படங்கள் திட்டமிடப்பட்டுள்ளது. இது நிச்சயம் எதிர்பார்த்த லாபத்தை ஈட்டாது.
தனுஷின் கேப்டன் மில்லர், கார்த்தியின் ஜப்பான், சிவகார்த்திகேயனின் அயலான், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வரும் ஜிகர்தண்டா 2 என நான்கு எதிர்பார்ப்புக்குள்ளான படங்கள் வரிசையில் இருக்கிறது. இத்தனை படங்கள் ஒன்றாக வந்தால் விற்பனையாளர்கள் லாபத்தில் குறை இஎக்கும். அதே சமயம் இரண்டு இரண்டு படமாக வந்தால் லாபம் இன்னும் கூடும்.
தற்போது கிடைத்துள்ள செய்தியின் படி ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜப்பான் திரைப்படம் இந்த மோதலில் இருந்து விலகவுள்ளது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஜெயிலர், ஆயுத பூஜைக்கு லியோ, தீபாவளிக்கு மற்ற 3 படங்கள் இருப்பதால் எஞ்சி இருக்கும் விநாயகர் சதுர்த்தி விடுமுறையில் வெளியிட திட்டமிடுகிறார்கள். விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகும்.