Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமாஜப்பான் - மேட் இன் இந்தியா? கார்த்தியின் டீசர் எப்படி இருக்கு?

ஜப்பான் – மேட் இன் இந்தியா? கார்த்தியின் டீசர் எப்படி இருக்கு?

இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்திருக்கும் திரைப்படம் ஜப்பான். இந்த படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார். ராஜூமுருகன் எப்போதும் வித்தியாசமான படங்களை கொடுக்கக் கூடியவர்.

- Advertisement -

இவர் தற்போது முதல் முறையாக கமர்சியல் பாணியில் களமிறங்கி இருக்கிறார். ஜப்பான் படத்தில் முதல் காட்சிகள் மற்றும் படத்தின் ரிலீஸ் தேதியும் இந்த டீசரில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. வரும் தீபாவளிக்கு இந்த படத்தை ரெடி செய்ய பட குழு முடிவு எடுத்துள்ளது.

- Advertisement -

வழக்கமான ஆக்ஷன் படங்களாக இல்லாமல் கொஞ்சம் மாறுபட்ட திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் கார்த்திக் நிறைய கேரக்டரில் காட்சியளிக்கிறார். இதனால் இது சிங்கிள் ஆக்டா அல்லது ட்ரிபிள் ஆக்டா என்ற சந்தேகமும் தற்போது எழுந்துள்ளது.

- Advertisement -

கார்த்தியை சிலர் இந்த படத்தில் காமெடியன் என்றும் சிலர் பெரிய கொள்ளைக்காரன் என்றும் சிலர் மோசமானவர் என்றும் கூறுகிறார்கள். மேலும் கார்த்தியின் வசன உச்சரிப்பும் மிகவும் வித்தியாசமான முறையில் அமைந்திருக்கிறது.

குறிப்பாக நீ யாருடா என கேட்கும் போது ஜப்பான் மேட் இன் இந்தியா என்று கூறும் வசனம் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் உள்ளது. மேலும் இந்த வீடியோவின் முடிவில் கார்த்தி தங்கப் பற்களை வைத்து சிரிக்கும் காட்சியும் மிகவும் வித்தியாசமாக எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த படத்தில் ஹீரோயினாக அனு இமானுவேல் நடித்திருக்கிறார். ஜிவி பிரகாஷின் இசையும் டீசரில் புதுவிதமான அனுபவத்தை கொடுத்திருக்கிறது. கடந்த ஆண்டு கார்த்தியின் சர்தாரும் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் திரைப்படமும் தீபாவளி அன்று ரிலீஸ் ஆனது.

இதில் சர்தார் வெற்றி பெற்ற நிலையில் தற்போது மீண்டும் இருவரும் தீபாவளிக்கு களம் காண்கின்றனர். கூக்கு, ஜோக்கர், ஜிப்சி போன்ற படங்களை கொடுத்த ராஜூமுருகன் தற்போது அதிலிருந்து விலகி கமர்சியல் படத்தை எடுத்திருக்கிறார்.

Most Popular