Tuesday, April 1, 2025
- Advertisement -
Homeசினிமாபையா 2 படத்தில் ஆர்யாவா கார்தியா.. ? லிங்குசாமியின் சினிமா வாழ்கையை காப்பாற்றுவாரா கார்த்தி.. ?

பையா 2 படத்தில் ஆர்யாவா கார்தியா.. ? லிங்குசாமியின் சினிமா வாழ்கையை காப்பாற்றுவாரா கார்த்தி.. ?

பல பிரபல இயக்குனர்களின் சிறந்த படங்கள் கார்த்தியை வைத்து இயக்கும்போது தான் வந்துள்ளது. உதாரணம் செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன், ஹெச்.வினோத்தின் தீரன் அதிகாரம் எண் ஒன்று, தெலுங்கு இயக்குனர் வம்சிக்கு தோழா மற்றும் சில இப்பட்டியலில் தொடரும். இவர்களைப் போல லிங்குசாமியின் மிகப் சிறந்த மற்றும் பெரிய வெற்றிப் படமான பையாவும் கார்த்தியின் நடிப்பில் தான் வந்தது.

- Advertisement -

2010ஆம் ஆண்டு கார்த்தி, தமன்னா இருவரும் காரில் நெடு தூரச் சாலை பயணக் கதையில் நடித்தனர். பெங்களூருவில் இருந்து பம்பாய் செல்லும் பயணத்தில் இடையே நடக்கும் விஷயங்கள் இறுதியில் அவர்களை காதலர்கள் ஆக்குவதே கதை.

இப்படத்தில் இடம்பெற்ற 6 பாடல்களும் அற்புதமாக அமைந்திருக்கும். படத்தின் வெற்றிக்கு இசையில் யுவன் ஷங்கர் ராஜாவும் பெரிய பங்களித்துள்ளார். சிறப்பாக அமைத்த பையா படத்தின் இரண்டாம் பாகம் குறித்த செய்திகள் சில மாதங்களாக பேசப் படுகிறது. 2ஆம் பாகம் உருவாகுவது உறுதியாகிவிட்டது.

- Advertisement -

முதலில் பையா பார்ட் 2வில் ஆர்யா நடிக்கவுள்ளதாக கூறினர். ஆனால் தற்போது மீண்டும் முதல் பாகத்தில் நடிதவர்களே இந்தப் படத்திலும் வரவிருக்கிறார்கள் எனச் சொல்கின்றனர். அண்மையில் இதற்காக கார்தியைச் சந்தித்து கதையை சொல்லி அவரிடம் இப்படத்தை உறுதிச் செய்ததாக லிங்குசாமி கூறுகிறார்.

- Advertisement -

லிங்குசாமியின் இயக்கத்தில் கடைசியாக வந்த நான்கு படங்களும் பெரிய அளவில் சாதிக்கத் தவறியது. அதில் 3 படங்கள் ஃப்ளாப். அந்த 5 படங்களில் வேட்டை, அஞ்சான் ஓரளவு சுமாராகவும் சண்டைக்கோழி, வாரியர் படங்கள். தோல்விப் படங்களாக அமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

எப்போதும் இயக்குனர்களின் லக்கி சார்மாக விளங்கும் கார்த்தி இம்முறை லிங்குசாமியின் டிராக்கை மாற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். பழைய லிங்குசாமியைப் போல் வந்தால் நிச்சயம் பையா 2 வெற்றி தான். விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்.

Most Popular