Tuesday, December 3, 2024
- Advertisement -
Homeசினிமா“ விஜய்யும் நானும் 18 வயதிலேயே... ஆச்சரியப் பட்டேன் ” கோலிவுட் தளபதி விஜய்யை பற்றி...

“ விஜய்யும் நானும் 18 வயதிலேயே… ஆச்சரியப் பட்டேன் ” கோலிவுட் தளபதி விஜய்யை பற்றி ஓப்பனாக பேசிய காத்ரீனா கைப்

பாலிவுட் அழகியல் நாயகியான காத்ரீனா கைப் அண்மையில் நேர்காணல் ஒன்றில் தமிழ் திரையுலக ஸ்டாரை புகழ்ந்து தள்ளியுள்ளார். விஜய் சேதுபதி – காத்ரீனா கைப் ஜோடியில் ஶ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ மேரி கிருஸ்மஸ் ’ ஆகும். இந்தத் திரைப்படம் ஹிந்தி மற்றும் தமிழில் வெளியாகிறது.

- Advertisement -

இதற்கான புரமோஷன் பணியாக அண்மையில் நேர்காணல் ஒன்றில் படத்தின் நாயகன், நாயகி, இயக்குனர் கலந்துக் கொண்டனர். இதில் பேசிய நடிகை காத்ரீனா கைப்பிடம் தொகுப்பாளர் தமிழில் சிறப்பாக நடனம் ஆடுபவர்களின் பெயர்களை பட்டியலிட்டார்.

அவர் சிம்பு, விஜய், தனுஷ், பிரபுதேவா எனச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே நடிகை காத்ரீனா, “ விஜய் என நீங்கள் குறிப்பிடுவது தளபதியை அல்லவா ? ” எனக் கேட்டார். உடனே தொகுப்பாளரும் ஆம் எனக் சொல்ல, கத்ரீனா தளபதி விஜய்யை அவரது நடனத் திரணுக்காக புகழ் மழையில் நனைத்தார்.

- Advertisement -

முதன் முதலில் தளபதி விஜய்யுடன் இணைந்து பணியாற்றிய நினைவுகளைப் பகிர்ந்தார். அவர் கூறியதாவது, “ எனக்கு விஜய் சாரின் நடனம் ரொம்ப பிடிக்கும். நான் என்னுடைய முதல் விளம்பர படத்தை அவருடன் தான் சேர்ந்து நடித்தேன். அது தான் கொக்க கோலா விளம்பரம். அப்போது பார்த்த போது விஜய் சார் சிறப்பாக நடனம் ஆடிக் கொண்டிருந்தார். ஆனால் எனக்கோ அதைப் பற்றி ஒன்றுமே தெரியாது. ”

- Advertisement -

மேலும், “ விஜய் சார் சூப்பரான ஸ்டெப்ஸ் போட்டு நடனம் ஆடிக் கொண்டே இருந்தார். எனக்கு அப்போது 18 வயது தான், நான் ஒரு ஓரமாக அமர்ந்து அவரின் நடனத்தை வியந்து ரசித்துக் கொண்டிருந்தேன். ” என்றார் நடிகை காத்ரீனா கைப். நம் தளபதி விஜய்யை அவரது நடனதிற்காக இவ்வாறு புகழ்வது புதிதல்ல.

கோலிவுட்டில் சிறப்பான நடனத்தை வெளிக்காட்டும் நடிகர்களில் விஜய் தான் இன்னுமும் நம்பர் 1 இடத்தில் உள்ளார் எனச் சொன்னால் அதில் மிகையாகாது. 49 வயதில் கூட அவ்வளவு சிறப்பாக நடனம் ஆடுகிறார். கடந்த படங்கள் வாரிசு, லியோ அதற்க்கு சரியான உதாரணம் ஆகும்.

Most Popular