Monday, October 7, 2024
- Advertisement -
Homeசினிமாகவினுக்கு பிறந்தநாள் அடுத்த பிறந்தநாள் மனைவியுடனா?

கவினுக்கு பிறந்தநாள் அடுத்த பிறந்தநாள் மனைவியுடனா?

விஜய் டிவி ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் இருந்து தொலைக்காட்சிக்கு அறிமுகமானார் நடிகர் கவின். அந்தத் தொடரில் அவர் நடிக்கும் பொழுதே அவருக்கென்று தனி ரசிகர்கள் இருந்தார்கள். வேட்டையன் என்ற கதாபாத்திரத்தில் அவர் மிக எதார்த்தமாக நடித்திருந்தது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.

- Advertisement -

அதற்குப் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டார். அந்த சீசனில் அவருடன் நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் புக்கிங் தர்ஷன் போன்ற சக போட்டியாளர்களுடன் கவின் செய்த அட்ரோசெட்டிகள் எல்லாம் ரசிக்கும் வண்ணம் இருந்தது. பிக் பாஸ் சீசன் கலிலேயே அந்த சீசன் அதிக டிஆர்பி யை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது அதற்கு காரணம் அவர்களுடைய கூட்டணி தான்.

கவினின் திரைப்பட வாழ்க்கை:

இவர் ஆரம்பத்தில் நட்புனா என்னன்னு தெரியுமா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அது அந்த அளவிற்கு ரீச் ஆகவில்லை ஆனால் பிக் பாஸ்க்கு பிறகு இவர் நடித்த லிப்ட் என்ற திரைப்படம் கொரோனா காலத்தில் ஓடிட்டியில் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு பெற்றது.

- Advertisement -

அதை தொடர்ந்து அவர் டா டா என்ற திரைப்படம் நடித்திருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்தத் திரைப்படம் எதிர்பார்த்ததை விட ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது.

- Advertisement -

இந்த திரைப்படத்தின் கவினின் நடிப்பு அவர் மீது ஒரு நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.நான்கு கோடி ரூபாய் பட்சத்தில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ஏறத்தாழ 20 கோடிக்கு மேல் வசூலை பெற்று வெற்றி அடைந்திருக்கிறது.

கவினின் சொத்து மதிப்புகள்:

சீரியல் நடித்த பொழுதே நடிகர் கவினுக்கு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். லிஃப்ட் ,டாடா போன்ற வெற்றி திரைப்படங்களை நடித்த பிறகு அவருடைய சம்பளம் கோடிக்கு சென்று விட்டது.

ஒரு திரைப்படத்திற்கு ஒன்றிலிருந்து இரண்டு கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என்றும் ஐந்திலிருந்து ஏழு கோடி வரை இவரிடம் சொத்து மதிப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவருக்கு சொந்தமாக ஒரு பிளாட் இருக்கிறது என்றும் சொந்தமாக கார் கூட வைத்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

விரைவில் கவினுக்கு திருமணம்:

குறுகிய காலத்தில் சினிமா உலகில் ஓரளவு நல்ல ரீட்சை பெற்றிருக்கும் கவின் இன்று தன்னுடைய 33 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். பல பிரபலங்கள் இவர்கள் இவருக்கு வாழ்த்து கூறி வரும் நீண்ட நாளில் இவருடைய ரசிகர்கள் மனதில் ஒரு கேள்வியும் எழுந்திருக்கிறது.

33 வயது ஆகிவிட்டது, ஓரளவு வாழ்வில் நல்ல இடத்திற்கும் சென்று விட்டார். இனி என்ன நடிகர் கவின் விரைவில் அவருடைய திருமண தகவலை பற்றி ரசிகர்களிடம் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கிறார்கள். அவருடைய அடுத்த பிறந்த நாளை அவருடைய மனைவியுடன் கொண்டாடுவார் என்றும் ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

Most Popular