கனா காணும் காலங்கள் தொடரில் முதன் முதலில் அறிமுகமாகி தன்னுடைய துருதுரு நடிப்பால் இளைஞர்களின் மனதை கவர்ந்தவர் கவின். இவர் பின்பு சரவணன் மீனாட்சி 2 தொடரின் கதாநாயகனாக நடிகை ரட்சிதாவுடன் இணைந்து நடித்தார்.
இதில் வேட்டையன் என்ற கதாபாத்திரத்தில் பிளேபாயாக தோன்றி தன் நகைச்சுவையான பேச்சால் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தார். அந்த தொடர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது அதன் பின்பு பிக் பாஸ் சீசன் 3 யில் பங்கேற்றார்..
அந்த நிகழ்ச்சியில் அவருடன் டான்ஸ் மாஸ்டர் சாண்டி இலங்கை தமிழர்களான லாஸ்லியா மற்றும் தர்ஷன் மலேசியாவில் இருந்து வந்த முகின், வத்திக்குச்சி வனிதா, சித்தப்பு சரவணன் போன்ற நட்சத்திரங்கள் பங்கு பெற்று பொழுதுபோக்கின் உச்சத்துக்கே பொது மக்களை கொண்டு சென்றனர்.
இதுவரை நடந்த போது சீசன்களிலேயே யாராலும் மறக்க முடியாதது பிக் பாஸ் சீசன் 3 தான்.. அதற்கு மிகப்பெரிய காரணம் கவின் மற்றும் லாசியாவின் தரமான காதல்தான்.
இந்த நிகழ்ச்சியில் முதலில் பிளேபாயாக களம் இறங்கிய கவின் பின்பு லாஸ்லியாவை மெல்ல மெல்ல காதலிக்க தொடங்கினார். அவர்கள் இருவரும் இதை வெளிப்படையாக காட்டிக் கொள்ளாவிட்டாலும் அனைத்து ரசிகர்களும் இதனை உணர்ந்தனர்.
திடீரென்று வந்த லாஸ்லியாவின் அப்பா இருவரையும் லெப்ட் ரைட் வாங்கியதில் இருவரும் நிலைகுலைந்தனர்.
அதன் பிறகு தனக்கு 5 லட்சம் மட்டும் போதும் என்று நடுவிலேயே போட்டியில் இருந்து விலகினார் கவின்.அவர் இறுதி வரை போட்டியில் நீடித்திருந்தால் அவர்தான் நிச்சயம் வெற்றி பெற்று இருப்பார் என்பது மக்களின் ஆதங்கமாக இருந்தது.
நிகழ்ச்சி முடிந்ததும் திருமணத்தை அறிவிப்பார் கவின் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கோ ஏமாற்றமே மிஞ்சியது.
இருவரும் இரு வேறு பாதைகளில் பயணிக்க தொடங்கியதை ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கவனித்தனர்.
அதன் பின்பு சிறிய கதாபாத்திரங்களில் கவின் வெள்ளிதிரையில் தோன்றி கொண்டிருந்த நிலையில், லிஃப்ட் தாதா போன்ற திரைப்படத்தில் நடித்து அனைவரையும் மகிழ்வித்தார்.இந்த சூழ்நிலையில் கவினுக்கு வரும் இருபதாம் தேதி திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் சுற்றி சுழன்று கொண்டிருக்கின்றன..
தனியார் பள்ளி ஒன்றின் ஆசிரியையான மோனிகா கவினின் நீண்ட நாள் காதலி என்ற தகவல் வெளியாகி உள்ளது.. இது அனைவரின் சம்மதத்தோடும் நடக்க இருக்கும் திருமணம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது..
லாஸ்டலியாவும் கவினும் திருமணம் செய்வார்கள் என்ற நம்பிக்கையுடன் இருந்த பிக் பாஸ் ரசிகர்கள் தான் இலவு காத்து கிளியாக வருத்தத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் கவினின் திருமண செய்தி வெளிவந்த நிலையில் லோஸ்லியா தன்னுடைய instagram பக்கத்தில் சூரியகாந்தி பூவை போட்டு தனது புகைப்படத்தை போட்டு இருக்கிறார். அதாவது இதில் தமக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும் தான் எப்போதும் போலவே மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதை நோஸ்லியா சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.