சினிமா

விஜய் மாஃபியாவில் இணைந்த கீர்த்தி சுரேஷ்.. என்ன செஞ்சி இருக்காங்க பாருங்க!

தமிழ் சினிமாவில் விஜய்க்கு ஆதரவாக வேண்டுமென்றே கருத்துக்களை பரப்புவதாக சிலர் குற்றம் சாட்டுவார்கள். அவர்களை கிண்டல் செய்யும் விதமாக விஜய் மாஃபியா என்று அழைப்பது உண்டு. மேலும் நடிகர் விஜய் தன்னுடைய படங்கள் முடித்துவிட்டு அவர் மகிழ்ச்சியாக இருந்தால் தன்னுடைய பணியாற்றிய படக் குழுவினருக்கு தங்க நாணயத்தை பரிசாக வழங்குவார்.

Advertisement

இதேபோன்று பத்திரிக்கையாளர்கள் விமர்சகர்கள் ஆகியோருக்கும் தங்க நாணயம் வழங்குவதுண்டு. இதில் எந்த தவறு இல்லை என்றாலும் இதனை பலரும் விமர்சிப்பார்கள். இந்த நிலையில் நடிகர் விஜய் செயலை கீர்த்தி சுரேஷ் காப்பி அடித்திருக்கிறார். தசரா படத்தில் கீர்த்தி சுரேஷ் நாளைக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இதில் கீர்த்தி சுரேஷின் நடிப்பு வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது கீர்த்தி சுரேஷ்க்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என அவர் எதிர்பார்க்கிறார். காரணம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை விட்டு அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த பெயரை கீர்த்தி சுரேஷ்க்கு பெற்று தரவில்லை.

Advertisement

இதனால் தசரா படம் மூலம் கம்பேக் கொடுக்கும் முயற்சி கீர்த்தி சுரேஷ் இருக்கிறார். இந்த நிலையில் தசரா படம் அவருக்கு மனநிறைவை கொடுத்திருப்பதால், இதில் பணியாற்றிய கலைஞர்கள் 150 பேருக்கு கீர்த்தி சுரேஷ் தங்க நாணயத்தை பரிசாக கொடுத்திருக்கிறார்.

இதில் ஒரு கிராமிலிருந்து 10 கிராம் வரை தங்கக் காசுகளை கீர்த்தி சுரேஷ் கொடுத்திருக்கிறார்.  இதைப் பார்த்து ரசிகர்கள் நீங்களும் விஜய்யின் மாஃபியாவில் இணைந்து விட்டீர்களா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். கீர்த்தி சுரேஷின் இந்த செயல் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது. ஏனென்றால் திரைப்பட கலைஞர்களுக்கு போதிய சம்பளம் கிடைக்காத நிலையில் படத்தின் நடிக்கும் கலைஞர்கள் இதுபோன்ற உதவி செய்ய வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top