இந்திய சினிமாவில் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் கிடக்கும் படங்களில் முதன்மையாக இருப்பது லியோ தான். இரண்டாவது முறை இளைய தளபதி விஜய் – லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ள இப்படத்தில் ஓர் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. அனைத்துப் பணிகளும் முடிந்து தற்போது படக்குழு புரொமோஷன் பணிகளில் கவ்ணம் செலுத்தி வருகிறது.
லியோ படம் அதிக வசூல் ஈட்ட வேண்டுமென்பதற்காக ஹிந்தியில் புரொமோஷன் செய்ய தனி பட்ஜெட்டை ஒதுக்க திட்டமிட்டிருந்தது. அதோடு வெளிநாடு & தமிழ்நாட்டில் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவும் நடத்தவிருந்தனர். திட்டமிட்ட எதுவும் படக்குழுவுக்கு சாதகமாக நடக்கவில்லை.
ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த இசை வெளியீட்டு விழாவை நேற்று படக்குழு ரத்து செய்தது. ஏற்கனவே வெளிநாடு நிகழ்ச்சி இல்லை என சொன்ன போதே வருந்திய ரசிகர்கள் இந்த செய்திக்குப் பின் சுக்கு நூறாய் உடைந்தனர். இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு காரணம் தி.மு.க அரசு தான் என பேக்சுகள் உலாவி வருகிறது.
இரு தினங்களுக்கு முன் சவுக்கு சங்கர் தன் டிவிட்டர் பக்கத்தில் லியோ தயாரிப்பாளர்களுக்கும் ரெட் ஜெயன்ட் விநியோகிஸ்தர்களுக்கும் இடையே சில சிக்கல்கள் போய்க் கொண்டிருப்பதாக பதிவிட்டு இருந்தார். இதனை படக்குழு இல்லை என மறுத்தது. இந்தச் செய்தி வந்த மறு தினமே ஆடியோ லான்ச் ரத்து ஆகியுள்ளது.
அதிக டிக்கெட் டிமாண்ட் இருப்பதால் படக்குழு இந்த முடிவுக்கு வந்துள்ளது. ஏற்கனவே ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட துயரத்தை மீண்டும் மக்களுக்கு அளிக்க விரும்பவில்லை என படக்குழு நினைத்து இதனை செய்துள்ளது. என்ன தான் படக்குழு இதற்கும் ஆளுங்கட்சிக்கும் சம்மந்தம் இல்லை எனக் கூறினாலும் இன்னும் சிலர் சந்தேகத்தில் தான் இருக்கின்றனர்.
வெளிநாடு & தமிழகம் என இரு இடங்களும் இல்லை என ஆகிவிட்ட நிலையில் கேரளா வினோகிஸ்தர் ஶ்ரீ கோகுலம் நிறுவனம் கொச்சியில் இசை வெளியீட்டு விழா நடத்த அழைத்துள்ளனர். இதற்கு படக்குழு இன்னும் எந்த பதிலும் கூறவில்லை. ரசிகர்கள் இதாவது நடந்தால் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கின்றனர்.
மேலும் கேரளாவில் நடிகர் விஜய்க்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அவர்களும் விஜய்யை பார்க்க வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளனர். இசை வெளியீட்டு விழா புரொமோஷனின் முதுகெலும்பு என்றே கூறலாம். அதனால் லியோ படக்குழு இதனை கருத்தில் கொண்டால் நன்மையாக இருக்கும்.