சினிமா

விக்ரம் படத்தை பார்த்து மிரண்டு போன கே.ஜி.எப் டைரக்டர் ! சூர்யாவுக்கு ஸ்பெசல் பாராட்டு

Prashanth Neel about Vikram movie

இந்திய சினிமாவில் அதிக வசூலை ஈட்டிய திரைப்படங்களில் ஒன்று கே ஜி எஃப் 2. கோலார் தங்க சுரங்கத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பல ரெகார்டுகளை படைத்தது. இந்திய திரைப்படம் மேப்பில் சாண்டல்வுட் சினிமாவும் உள்ளது என உலகத்திற்கு காட்டிய திரைப்படம் கேஜிஎப். கே ஜி எஃப் வெற்றியைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களும் அதன் இயக்குனர் பிரசாந்த் நீளுடன் இணைந்து பணியாற்ற விரும்பி வருகின்றனர்.

கே ஜி எஃப் 2 வின் சாதனையை விக்ரம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தமிழ்நாட்டில் அதிக வசூல் ஈட்டிய திரைப்படம் என விக்ரம் சாதனை படைத்தது. கேரளாவில் மட்டும் 40 கோடி ரூபாய் வசூலை விக்ரம் அள்ளியது. தெலுங்கு மற்றும் கர்நாடகாவிலும் அதிக வசூலை ஈட்டினாலும் ஹிந்தி மார்க்கெட்டில் கேஜிஎப் லெவலுக்கு விக்ரம் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்த நிலையில் விக்ரம் திரைப்படம் கடந்த எட்டாம் தேதி ஓடிடி பிளாட்பார்ம் ஆன ஹாட்ஸ்டார் இல் வெளியானது . இந்தப் படத்தை கே ஜி எஃப் 2 இயக்குனர் பிரசாந்த் நீள் கண்டுள்ளார். தற்போது அந்தப் படத்தை பார்த்து பிரமித்து போய் அவர் ட்வீட் போட்டு உள்ளார்.

விக்ரம் திரைப்படத்தின் ஒட்டுமொத்த குழுவுக்கும் என் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ள பிரசாந்த் நீள், நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி , ஃபகத் பாசில் ஆகிய மூன்று பேரையும் ஒன்றாக பார்ப்பது கண்களுக்கு விருந்து படைத்ததாக அவர் தெரிவித்துள்ளார். விக்ரம் திரைப்படத்தின் சண்டைக் காட்சி மாஸ்டர்களான அன்பறிவுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். விக்ரம் திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பணிகள் தமக்கு மிகவும் பிடிக்கும் என சுட்டிக்காட்டி உள்ள பிரசாந்து நீள் அனிருத்தை ராக்ஸ்டார் என்று பாராட்டியுள்ளார்.

இதேபோன்று நடிகர் சூர்யா நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரம் கொடுத்த தாக்கத்திலிருந்து தம்மால் மீள முடியவில்லை என்றும் பிரசாந்த் கூறியுள்ளார் . இந்தியாவே திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனர் பிரசாந்த் நீள் , தற்போது விக்ரம் திரைப்படத்தை பாராட்டிருப்பது தமிழக ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் சூர்யாவை ஸ்பெஷல் ஆக பிரசாத் நீள் பாராட்டியுள்ளார் இதனால் அவரது திரைப்படங்களில் நடிகர் சூர்யா தோன்றினாள் எப்படி இருக்கும் என அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் சிலாயித்து பதிவுகளை போட்டு வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது.

TOP STORIES

To Top