லோகேஷ் கனகராஜ் திரைப்பட வாழ்க்கையில் மிக முக்கிய வாய்ந்த படமாக கருதப்படுவது கைதி நடிகர் கார்த்தியின் முதல் 100 கோடி வசூலை பெற்ற படமாக கைதி இருந்தது. கைதியின் தொடர்ச்சியாக தான் விக்ரம் திரைப்படம் எடுக்கப்பட்டது. இந்த நிலையில் கைதி திரைப்படத்தை ஹிந்தியில் பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவகன் ரீமிக்ஸ் செய்தார் .
இந்த படம் டீசர் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் அதன் தாக்கத்திலிருந்து இன்னும் மீளாத நிலையில் தற்போது ட்ரெய்லர் என்கின்ற பெரிய குண்டை தூக்கி போட்டு உள்ளார். நடிகர் அஜய் தேவகன் நடித்து இயக்கும் இந்த திரைப்படம் 3d இல் வெளியாக உள்ளது. தமிழில் இல்லாத பல தேவையில்லாத காட்சிகளை ஹிந்தியில் அஜய் தேவகன் எடுத்துள்ளார். உதாரணத்துக்காக ஜெயில், கோயில் காட்சி படத்தில் எதற்கு வருகிறது என்று தெரியவில்லை.
படத்தின் சில காட்சிகள் இது மெகா பட்ஜெட் லொள்ளு சபா டா என்று கமெண்ட் அடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நல்ல திரில்லர் படமாக எடுக்கப்பட்ட கைதியை ராகவா லாரன்ஸின் காஞ்சனா திரைப்படம் போல் மாற்றி எடுத்திருக்கிறார் அஜய் தேவகன். குறிப்பாக சேசிங் காட்சிகள் பைக் எல்லாம் கண்ணா பின்னால் என்று பறக்குகிறது. அஜய் தேவகன் சாமி கையில் வைத்திருக்கும் சூலத்தை எடுத்துக்கொண்டு எதிரிகளை துவம்ஸம் செய்கிறார். குறிப்பாக சண்டைகள் எல்லாம் தெலுங்கு படத்தில் தான் காமெடிகளாக இருக்கும். ஆனால் ஒரு படி மேல் போய் அதையெல்லாம் தூக்கி சாப்பிட்டு இருக்கிறார் அஜய் தேவகன்.
இது போன்ற கிராபிக்ஸ் காட்சிகளை தமிழில் எடுத்தால் அந்த படம் முதல் காட்சியிலே நமது ரசிகர்கள் இழுத்து மூடி விடுவார்கள். இதனை ஹிந்தி சினிமா ரசிகர்கள் பார்ப்பார்களா இல்லை தூக்கி போட்டு மிதிப்பார்களா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். தற்போது தான் அஜய் தேவகன் நடித்த திரிஷ்யம் 2 திரைப்படம் 250 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. ஆனால் கைதி என்ற பர்னிச்சரை அஜய் தேவகன் எப்படி உடைத்திருக்கிறார் என்று படம் வந்தால் தான் தெரியும்.