சினிமா

மலையாள சினிமாவின் கோல்டன் டிக்கெட் அது ! முக்கிய கதாபாத்திரத்தை தவறவிட்ட தனுஷ் – பகத் பாசில் பேட்டி

Fahad Fazil and Dhanush

தமிழ் சினிமாவில் இருந்து ஹாலிவுட் வரை சென்று புகழ்பெற்றவர் நடிகர் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தில் நடித்து அதன் பிறகு தனது சகோதரர் செல்வராகவனிடம் நடிப்பை கற்று தற்போது தனக்கு ஈடு இணை இல்லாத நபராக தமிழ் சினிமாவில் தனி ரூட்டை பிடித்து முன்னேறி வருகிறார் நடிகர் தனுஷ். நடிகர் தனுஷ் பாலிவுட்டில் ஏற்கனவே கால் பதித்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தனுஷ் நடித்த மாரி திரைப்படம் கேரளாவில் மிகப் பிரபலம். தமிழக இளைஞர்கள் பிரேமம் பின்னால் சுற்றிக் கொண்ட நிலையில், கேரள இளைஞர்கள் மாரி திரைப்படத்தை மிகவும் கொண்டாடினர். மாரி கெட்டப்பை போட்டு டான்ஸ் ஆடுவது என வீடியோக்களை எல்லாம் கேரளா இளைஞர்கள் அப்போது பதிவிட்டனர். இதனால் கேரளத்தில் மிகவும் பிரபலமான கும்பலாகி நைட்ஸ் என்ற திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானது.

Advertisement

இதில் இயக்குனர் மாது சி நாராயணன் இயக்க பகத் பாஸில் , சவுபின் சாகிர் ,ஷான் நிகம் ,அண்ணா பென் ஆகியோர் நடித்தனர். 4 அண்ணன் தம்பிகளுக்கு இடையே நடைபெறும் குடும்ப உறவு, பாசப் போராட்டம் ஆகியவற்றை மையமாக வைத்து உருவான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை பகத் பாசிலின் தயாரிப்பு நிறுவனமே எடுத்தது.

இந்த நிலையில் படத்தின் சமீ என்ற கேரக்டரில் பகத் பாஸில் நடித்தார். இந்த படத்தின் வில்லன் போல் காண்பிக்கப்படும் அந்த கதாபாத்திரம் வித்தியாசமானவை. முதலில் இந்த படத்திற்கு நடிகர் தனுஷ் தான் நடிக்க இருந்ததாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. நடிகர் தனுஷ்க்கு கதை பிடித்திருந்ததாகவும் , ஆனால் டேட் பிரச்சினைகளால் அதில் நடிக்க முடியாமல் போய்விட்டதாகவும் கூறப்படுகிறது. ஒரு வேலை கும்பலாகி நைட்ஸ் படத்தில் தனுஷ் நடித்திருந்தால் மலையாள சினிமாவில் அவருக்கென தனி மார்க்கெட் உருவாகி இருக்கும். கும்பலாகி நைட்ஸ் தமிழில் எடுக்கப்படுவதாக இருந்தது. ஆனால் இதுவரை அதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை . மலையாளத்தில் மிஸ் செய்த கதாபாத்திரத்தை ஒருவேளை தமிழில் தனுஷ் செய்தால் நிச்சயம் சிறப்பாக வந்திருக்கும்.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top