தமிழ் சினிமாவில் தான் சூப்பர் ஒன் என்று தன்னுடைய படங்களில் அடிக்கடி கூறி வருபவர் ரஜினிகாந்த். ஒரு காலத்தில் உண்மையான சூப்பர் ஸ்டார் ஆக திகழ்ந்தாலும், பிறகு அரசியலுக்கு வரப்போகிறேன் என்று கூறியதால் அவருடைய படங்கள் சரிந்தது.
இந்த நிலையில் அவரை விட விஜய் அஜித்,சூர்யா ஆகிய அவர்களின் படங்கள் நன்றாக ஓடத் தொடங்கியதால் ரஜினியின் மார்க்கெட் குறைந்தது. இந்த நிலையில் தான் நடிகர் ரஜினி மோகன்லால், சிவக்குமார், சுனில் மற்றும் தமன்னாவின் தயவால் ஜெயிலர் திரைப்படத்தில் 600 கோடி ரூபாய் வசூல் சாதனையை படைத்து மீண்டும் தன்னுடைய பவரை நிருபித்தார்.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தை வைத்து லால் சலாம் என்ற திரைப்படத்தை அவருடைய மகள் இயக்கினார். இந்தத் திரைப்படம் முதலில் தீபாவளிக்கு ரிலீசாக இருந்தது அப்போது லாரன்ஸ் மற்றும் கார்த்திக் திரைப்படம் வெளியாக இருந்தால் பொங்கலுக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், விஜய் சேதுபதியின் மேரி கிறிஸ்மஸ் போன்ற திரைப்படங்கள் வெளிவர உள்ளன இதனால் பொங்கல் பந்தயத்தில் இருந்து லால் சலாம் பின்வாங்கி இருக்கிறது. ஆனால் முதலில் யார் படம் வந்தாலும் நம்ம படம் ஓடும் என்ற நம்பிக்கையில் ரஜினி இருந்தாராம்.
ஆனால் படத்தை வாங்குவதற்கு எந்த வினியோகஸ்தரும் முன்வரவில்லை. இதற்குக் காரணம் ரஜினியின் மகள் எடுத்த கோச்சடையான் திரைப்படம். வெறும் நஷ்டத்தை அனைவருக்கும் ஏற்படுத்தியது. இதிலிருந்து தற்போது தான் ரஜினியே மீண்டு வந்துள்ளார்.
தற்போது மீண்டும் ரஜினியின் மகள் திரைப்படத்தை வாங்க யாரும் ஆர்வம் காட்டவில்லை. ரஜினி முழு படம் வந்தாலே தற்போது யாரும் பார்ப்பதில்லை. அவருக்கே தமன்னா மோகன்லால் என மற்ற ஹீரோக்களின் தயவு தேவைப்படும் நிலையில் அவர் பாதி படத்தில் தான் நடிக்க இருக்கிறார்.இதனை போய் யார் வாங்குவார்கள் என்று வினியோகஸ்தர்கள் பேசி வருகிறார்களாம். இது ரஜினி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.