சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லால் சலாம் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரைக்கு வந்தது. இந்த படத்தில் முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கௌரவ தோற்றத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது. ஆனால் படத்தில் சுமார் ஒரு மணி நேரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வருகிறார்.
இதனால் இது ரஜினிகாந்த் படம் தான் என்று விமர்சனங்கள் தெரிவிக்கின்றன. லால் சலாம் திரைப்படத்திற்கு எதிர்பார்த்த அளவு கூட்டம் வரவில்லை. எனினும் படத்தின் விமர்சனத்திற்கு பிறகு கூட்டம் வரும் என திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதை இப்போது சுத்தமாக நடக்காது என தெரிந்து விட்டது.
தற்போது நாட்டுக்கு தேவையான கருத்தை படத்தில் சொன்னாலும் அதை சொன்ன விதம் மிகவும் மொக்கையாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.அம்மி குத்த தெரியாதவன் கையில் கொடுத்தது போல் கதையை இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சிதைத்து விட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
படம் மிகவும் தோய்வாக நகர்வதாகவும் ரஜினி வரும் சில காட்சிகள் விறுவிறுப்பாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். எனினும் சொல்ல வந்த விஷயத்தை ஜவ்வு போல் இழுத்து படத்தையே ஐஸ்வர்யா கெடுத்து விட்டதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பாடல்கள் காட்சிகள் எடுக்கப்பட்ட விதமும் சரி இல்லை என்றும் ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் பணிக்கும் ரசிகர்கள் ஏமாற்றத்தை தெரிவித்து இருக்கிறார்கள். ரஹ்மான் இந்த படத்தின் இசையில் சரியாக கவனம் செலுத்தவில்லை என்றும் அவர்கள் குறை கூறியுள்ளனர். படத்தின் முதல் பாதி ஓரளவுக்கு பார்க்கும் வகையில் இருப்பதாகவும் இரண்டாவது பாதி மோசமாக இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
இதனால் லால் சலாம் போட்ட காசை எடுக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த படத்திற்காக ரஜினி 40 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருக்கிறார். இதனால் தமிழகத்தில் மட்டும் இந்த திரைப்படம் 70 முதல் 80 கோடி ரூபாய் வரை வசூல் செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறது. அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்று திரைப்பட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் திரையில் மத நல்லிணக்கத்தை பற்றி பேசும் ரஜினி நிஜ வாழ்க்கையில் சங்கியாக இருப்பதால் ரசிகர்களாலும் படத்தை ஒன்றி இணைந்து பார்க்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.மேலும் ரஜினியின் சங்கீ ரசிகர்கள் அவர் முஸ்லீமாக நடித்திருப்பதையும் விரும்பவில்லை இதனால் இந்த படம் படுதோல்வியை தழுவும் என்பது குறிப்பிடத்தக்கது.