Friday, May 3, 2024
- Advertisement -
Homeசினிமாவிஜயை புகழ்ந்ததால் லால் சலாம் திரைப்படத்தில் விக்ராந்துக்கு நடந்த அநீதி .. ட்ரைலரை பார்த்த ரசிகர்கள்...

விஜயை புகழ்ந்ததால் லால் சலாம் திரைப்படத்தில் விக்ராந்துக்கு நடந்த அநீதி .. ட்ரைலரை பார்த்த ரசிகர்கள் ஆவேசம்..!

வருகின்ற 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர இருக்கும் லால்  சலாம் திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

படப்பிடிப்பு தொடங்கிய நாளிலிருந்து பல பிரச்சனைகளை சந்தித்த லால் சலாம் திரைப்படம் ஒரு வழியாக தற்பொழுது ட்ரெய்லரை வெளியிட்டது .சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ,விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில்  போன்ற பிரபலங்கள் நடித்திருக்கும் இந்த லால் சலாம் திரைப்படத்தின் டிரைலர் அனல் பறக்க அமைந்திருக்கிறது.

ஆரம்பத்தில் இருந்து பிரச்சனைகளோடு தொடங்கிய இந்த திரைப்படம் தற்பொழுது ட்ரெய்லரிலும் ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. இந்த திரைப்படத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு கதாபாத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது . அதேபோல் இந்த திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரம் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகும்.

- Advertisement -

இந்நிலையில் தற்பொழுது வெளியிடப்பட்டிருக்கும் டிரைலரில் ஒரு இருட்டடிப்பு நடந்திருக்கிறது .கடந்த சில நாட்களுக்கு முன்பு இத்திரைப்படத்தினுடைய இசை வெளியீட்டு விழாவில் விக்ராந்திடம் உங்களுக்கு எப்படிப்பட்ட பயிற்சியாளர் வேண்டும் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் என் அண்ணன் தளபதி விஜய் வேண்டும் என்று கூறினார். இதேபோல் விஷ்ணு விஷால் இடமும் கேட்கப்பட்டதற்கு அவர் எனக்கு அஜித் வேண்டும் என்று கூறியிருந்தார்.

- Advertisement -

நடிகர் விக்ராந்த் தளபதி விஜய்க்கு தம்பி என்பது பலரும் அறிந்த உண்மை. இதன் அடிப்படையில் அவர் கூறிய இந்த பதிலை மனதில் வைத்துக்கொண்டு தான் இவருக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இந்த ட்ரெய்லரில் இவரை இருட்டடிப்பு செய்து விட்டார்கள் என்று விஜய் ரசிகர்கள் குற்றம் சாற்றி வருகிறார்கள்.

முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விக்ராந்த் இந்த ட்ரெய்லரில் ஒரே ஒரு சீனில் மட்டும்தான் காட்சியளிக்கிறார். எந்த ஒரு வசனமும் அவர் பேசுவது போன்ற காட்சிகளும் இடம்பெறவில்லை. இது அவருக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அவமதிக்கும் செயல் என்று விஜய் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Most Popular